33.4 C
Chennai
Monday, Oct 28, 2024
maxres
ஆரோக்கியம் குறிப்புகள்

இட்லி அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க!

இட்லி பலருக்கும் பிடித்த உணவு என கூறினால் அது மிகையாகாது! கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்… ஏன்… சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.

தினமும் இட்லியை காலை உணவாக எடுத்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.

உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.

இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம்தான். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெய், நெய், வெண்ணெய் தடவிய இட்லி, ஃப்ரைடு இட்லி இவையெல்லாம் அதிக கலோரி கொண்டவை. இவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது கலோரி அதிகமாக உடலில் சேரும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் சட்னியிலும் கவனம் தேவை.

குறிப்பாக, தேங்காய் சட்னி. ஒரு சிறிய துண்டு தேங்காயில் (சராசரியாக 45 கிராம் எடையுள்ள) 159 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன. தேங்காயில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சாப்பிடும்போது அதிகமான அளவில் கலோரிகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய், நெய் அதிகமாக ஊற்றினால், இதுவும் அதிக கலோரி உடலில் சேரக் காரணமாகிவிடும்.

இதனோடு மெதுவடை சாப்பிடுவது பொருத்தமானது அல்ல. வடை, எண்ணெயில் பொரிக்கப்படுவது. அதிக கலோரிகளை உடலில் சேர்க்கக்கூடியது. வடையை மாலை நேரத்தில் லேசாக பசி வயிற்றைக் கிள்ளும்போது சாப்பிடலாம், தவறில்லை. காலையில் இட்லியுடன் வேண்டாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…மகள்களுக்கு அம்மாக்கள் கற்றுக் கொண்டுக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள்!

nathan

நம்ப முடியலையே..ஆண்களின் முத்தங்கள் அவர்களைப் பற்றி கூறும் ரகசியங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண் குழந்தை பிறக்கும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?

nathan

உங்களுக்கு முழங்கால் வலி தாங்க முடியலையா? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

சுப்பரான தாமரை விதை பாயாசம்

nathan

திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் எப்படி பார்க்கப்படுகிறது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடல் எடை அதிகரிக்க காரணம்!….

nathan

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

nathan