25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hyhutgjyfj
ஆரோக்கியம் குறிப்புகள்

நம்ப முடியலையே..ஆண்களின் முத்தங்கள் அவர்களைப் பற்றி கூறும் ரகசியங்கள்

காதலை வெளிப்படுத்தும் சிறந்த வழியாக முத்தம் இருக்கிறது. தங்களின் பல்வேறு உணர்வுகளை ஆண்கள் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

உங்கள் காதலன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் முத்தமும், முத்தம் கொடுக்கும் இடமும் கூறிவிடும். இந்த பதிவில் ஆண்களின் முத்தங்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

உதட்டில் முத்தம்

உதட்டில் முத்தம் கொடுப்பது உங்கள் காதலன் உங்கள் காதலை உண்மையாக மதிப்பதன் அர்த்தமாகும். வேகமாக, எதிர்பாராத நேரத்தில் கொடுக்கும் முத்தம் ஆண்கள் விடைபெறும்போது கொடுப்பதாகும். வீட்டில் இருக்கும் போது யாரும் பார்க்காத நேரத்தில் திடீரென அவர்கள் உங்களுக்கு முத்தம் கொடுத்தால் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டதன் அர்த்தமாகும். அதனையே பொது இடத்தில் செய்தால் உங்கள் உறவை அனைவருக்கும் வெளிப்படுத்த அவர்கள் நினைக்கிறார்கள்.
hyhutgjyfj

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம் கொடுப்பவர் உங்களை கவனித்துக் கொள்ள விரும்புகிறார். உங்கள் காதலன் நெற்றியில் முத்தமிடுவது அவர்கள் உங்களை பாதுகாப்ப விரும்புவதற்கான அர்த்தம் ஆகும். தங்களின் அனைத்து ரகசியங்களையும், வாழ்க்கையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் முக்கியமென்று நினைக்கும் போது அவர்கள் உங்கள் நெற்றியில் முத்தமிடுவார்கள்.

கையில் கொடுக்கும் முத்தம்

கையில் முத்தம் கொடுப்பவர்கள் அதிக கடலை போடுபவர்களாக இருப்பார்கள். கையில் முத்தம் கொடுப்பவர்களை வைத்து சிலவற்றை அறிந்து கொள்ளலாம். முதல் விஷயம் அவர் நம்பிக்கை நிறைந்தவர், ஏனெனில் பெண்களின் கையில் முத்தம் கொடுக்க ஒரு தனி தைரியம் வேண்டும். கையில் முத்தம் கொடுப்பவர்கள் காதலில் உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் எதற்கும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

மணிக்கட்டின் உட்புறம்

இது மிகவும் கவர்ச்சியான ஒன்றாகும். உங்கள் காதலன் உங்கள் மணிக்கட்டின் உட்புறத்தில் முத்தம் கொடுத்தால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இது ஒரு பெண்ணின் உடல் செயல்படும் விதம் தனக்குத் தெரியும் என்று அவர் உங்களிடம் கட்டிக்கொள்ள விரும்புகிறார் என்று அர்த்தம். மேலும் தன்னுடைய பாலியல் செயல்திறனை உங்களுக்கு காட்டுவதாக அர்த்தம்.

கழுத்தில் முத்தம்

கழுத்தில் முத்தம் கொடுத்தால் அவர் உங்கள் மீது தீவிரமான காதல் உணர்வுகளை கொண்டுள்ளார் என்று அர்த்தம். இந்த முத்தம் காதலில் மிகவும் சிறந்த முத்தமாக கருதப்படுகிறது, காதலில் ரொமான்ஸை அதிகம் விரும்புபவர்கள் கழுத்தில்தான் முத்தம் கொடுப்பார்கள். உங்கள் காதலர் கழுத்தில் முத்தமிட்டால் அந்த நேரத்தில் நீங்கள் அவருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தமிடுவது என்பது உங்கள் காதலன் உங்கள் மீது வைத்துள்ள அக்கறையின் வெளிப்பாடாகும். அவர்கள் உங்கள் மீது காதலை வெளிப்படுத்த விரும்புகிறாரே தவிர உங்கள் மீது பாலியல் ஆசையை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் தற்போதைய தேவை உங்களின் காதல் மட்டும்தான்.

கண்ணில் முத்தம்

கண்களில் முத்தம் கொடுப்பது உங்களைப் பாராட்டுவதின் அறிகுறியாகும். கண்களில் முத்தமிடுவது என்பது விசித்திரமானதாக தோன்றலாம். மேலும் கண்களில் முத்தமிடுவது என்பது பெண்களின் உணர்ச்சிகளை தூண்டாத ஒரு செயலாகும். உங்கள் கண்களில் காதலன் முத்தமிடுவது உங்கள் மீதான அவரின் நேசத்தையும், உங்களின் சிந்தனைகள் மற்றும் செயல்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதையையும் உணர்த்தும்.

மார்பில் முத்தமிடுவது

மார்பில் முத்தமிடுவது என்பது முழுக்க முழுக்க அவர் உங்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும். தனக்குள் இருக்கும் ஆசையையும், மோகத்தையும் வெளிப்படுத்த விரும்பும் ஆண்கள் மார்பகங்களில் முத்தமிடுவார்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா? மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாம் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

இந்த ஒரு பழத்தில் இம்புட்டு மருத்துவ குணங்களா?

nathan

கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகின்றதாம்!..

sangika

பெண்களுக்கு மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி

nathan

குழந்தை நோய் தொற்றில் இருந்து பாதுக்க

nathan

நாட்டு மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள் . சூப்பர் டிப்ஸ்….

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்.. பயன்தரும் சமையல் அறை குறிப்புகள் பற்றி பார்ப்போம்….!!

nathan