32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
Image 82
ஆரோக்கியம் குறிப்புகள்

சுப்பரான தாமரை விதை பாயாசம்

பாயாசம் என்றாலே அனைவருக்கும் பால் பாயாசம் தான் நினைவிற்கு வரும். ஆனால் பாயாசத்திலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தாமரை விதை பாயாசம். இந்த பாயாசம் சற்று வித்தியாசமான சுவையை கொண்டிருப்பதுடன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த தாமரை விதை பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை பண்டிகை நாட்களில் வீட்டில் செய்தால் பாராட்டைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

பால் – 3 கப்

தாமரை விதை – 1 கப்

சர்க்கரை – 1 1/2 கப்

ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

பாதாம் – 5-6 (பொடித்தது)

முந்திரி – 5-6 (பொடித்தது)

குங்குமப்பூ – 1 சிட்டிகை

நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாமரை விதையை போட்டு 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுத்து, ஒருதட்டில் போட்டு குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிது பாலில் குங்குமப்பூவை போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பாலானது சுண்டி கெட்டியாகும் போது, அதில் பொடி செய்து வைத்துள்ள தாமரை விதையை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும், குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கிவிட்டு, பின் அதில் பாதாம், முந்திரி, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை தூவினால், சுவையான தாமரை விதை பாயாசம் ரெடி!!!

Related posts

ஆன்லைன் கல்வி முறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள்

nathan

சப்பாத்தி கள்ளி.!குழந்தையின்மை பிரச்சனையை தவிர்ப்பதற்கு..

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிகவும் மோசமான பழக்கங்கள்!!!

nathan

karuppu ulundhu benefits in tamil – கருப்பு உளுந்து

nathan

இத பண்ணுங்க.! உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா?

nathan

எந்த வயதிற்குப் பிறகு, கர்ப்பம் தரிப்பது ஆபத்தானது என்பதை பெண்கள் அறிவார்கள்?

nathan

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது!…

sangika

இந்த ராசிக்காரங்க எவ்வளவு சோகமா இருந்தாலும் சந்தோஷமாக இருக்குற மாதிரி போலியா நடிப்பாங்களாம்…!

nathan