29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?/DOES DRINKING IS GOOD TO HEART?

161596-frederikaமது குடிப்பது இதயத்துக்கு நல்லதா?
தினமும், மிகக் குறைந்த அளவில் (30 மி.லி.,) மது குடிப்பது, இதயத்துக்கு நல்லது என்பது உண்மை தான் என்றாலும், டாக்டர்கள் குறிப்பிடும் மிகக் குறைந்த அளவு மதுவோடு, யாரும் நிறுத்துவது இல்லை. மது அதிகமாகக் குடிப்பது, இதயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுவில் உள்ள நச்சு, இதயத் தசைகளைப் பாதித்து, இதயத்தின் செயல் திறனை குறைத்துவிடும். மது உடலுக்கு எல்லா வகையிலும் தீங்கு ஏற்படுத்துகிறது. புகைப் பழக்கமும் கெடுதல் என்பது நமக்குப் பாலபாடம். ஆனால், புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் வேதனை.
ஆண்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும்
தவறு. மாதவிடாய் காலத்துக்குப் பின், பெண்களுக்கும் மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகம். பாரம்பரிய மரபணு குணாதிசயங்களால், பல பெண்கள் இளம் வயதிலேயே மாரடைப்பு நோய் வருகிறது. மேலும், சிலருக்கு கர்ப்பப்பையோடு சினைப் பைகளும் நீக்கப்படுவதால், அவர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.

எல்லா கொலஸ்ட்ராலும் கேடு ஏற்படுத்துமா?
இல்லை. ரத்தத்தில் எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் என, இரு வகை கொலஸ்ட்ரால் உண்டு. இதில், எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என்றும், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. எச்.டி.எல். கொலஸ்ட்ரால் எவ்வளவுக்கு எவ்வளவு ரத்தத்தில் அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மாரடைப்பு அபாயத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க, மாத்திரைகள் இல்லை. ஆனால், உடற்பயிற்சிகள் மூலம் அதிகரிக்க முடியும். கெட்ட குணங்களைக் கொண்ட எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அதிரோஸ்க்ளீரோஸினை உருவாக்கும். இந்த கொலஸ்ட்ராலை குறைக்க, மருந்துகள் உள்ளன. சீரான உடற் பயிற்சியும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
“பேஸ் மேக்கரின்’ பயன் என்ன?
இதய ரத்த நாளங்களில் அடைப்பு, இதய இயக்க பாதிப்பு, சீரற்ற இதய துடிப்புள்ளவர்களுக்கு, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படும். துடிப்பு இயக்கக் கருவி மற்றும் லீட் ஆகியவற்றை, உள்ளடக்கியது இக்கருவி. இதயத்துடன், லீட் இணைக்கப்பட்டிருக்கும். கருவி, இதயத்திற்கு மேல், உடலின் வெளித் தோலுக்கு அடியே பொருத்தப்பட்டிருக்கும்.
கவனமாய் இருக்கணும்:
பேஸ் மேக்கர் கருவியில் உள்ள பேட்டரி, 5 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில், பேட்டரியை மாற்றிக் கொள்வதோடு, வேறு சிகிச்சைகளின் போது, இது குறித்து தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள், சக்தி வாய்ந்த காந்தங்கள் அருகே செல்லக் கூடாது. பேஸ் மேக்கர் மீது மொபைல்போனை வைக்கக் கூடாது.
உங்களுக்கு தெரியுமா?:
உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம், 60 ஆயிரம் மைல் தூரம். இதயத்தில் இருந்து பம்ப் செய்யப்படும் ரத்தம், இந்த 60 ஆயிரம் மைல் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1 நிமிடம். இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு, 7,200 லிட்டர் ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது. நம் உடலில் உள்ள 5 லிட்டர் ரத்தத்தை சுத்தப்படுத்த, இதயம் தொடர்ந்து பம்ப் செய்து கொண்டே இருக்கிறது. இதனால் தான், ரத்தம் உடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இயந்திரங்கள் இயங்குவதற்கு மின் விசை தேவை. அதைப்போன்று, இதயமும் உடலில் உள்ள மின் விசை மூலம் தான் இயங்குகிறது. எந்த இயந்திரத்துக்கும் ஓய்வு உண்டு. ஓய்வில்லா இயந்திரம் இதயம்.
பரபரப்பான, பதற்றமான இன்றைய வாழ்க்கைச் சூழல், நமது இதயத்தை நாளுக்கு நாள் பலவீனமாக்கி வருகிறது. மன அழுத்தம் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என, சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நாம் குண்டாக இல்லை, அதிக கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை. நமக்கு மாரடைப்பு வராது என்று, யாரும் சொல்ல முடியாது. மன அழுத்தத்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மன மகிழ்ச்சி முக்கியம். மாரடைப்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்குத் தான் வரும் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி வருகிறது. 25 வயது, 30 வயது இளைஞர்கள் மாரடைப்பு நோய்க்கு பலியாவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 4 கோடி பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மூன்றில் ஒரு பங்கு, ஓரிரு நிமிடங்களிலேயே இறந்துவிடுகின்றனர்.
எதிர்மறை எண்ணங்கள், கோபம்,பொறாமை, ஆவேசம், ஆத்திரம், போன்ற உணர்வுகளால், மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன் விளைவாக, வேண்டாத அட்ரீனலின், கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்கள் உடலில் அதிகமாகச் சுரந்து, ரத்தத்தில் கலக்கின்றன. இது, ரத்தக் குழாய் அடைப்புக்கு, முக்கிய காரணமாகிறது. நல்ல சிந்தனை, அக மகிழ்ச்சி, மன அமைதி போன்றவற்றால், உடல் சீராக இயங்கும்போது, மூளையின் அலைகள் ஆல்பா நிலையில் செயல்பட்டு, என்டார்பின், செரடோனின், மெலடோனின் போன்ற, நல்ல ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து ரத்தத்தில் கலப்பதால், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஓராண்டில் கரைத்து, பூரண குணமடைய வழி கிடைக்கும்.

Related posts

ஒரு தேங்காய் போதும்… பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது…..

sangika

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் வேகவைத்த நீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

nathan

இந்த நாட்களில் உங்கள் நகங்களை வெட்டாதீர்கள்!

nathan

அதிக மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லி:தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

nathan

கர்ப்ப காலத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்வது எப்படி?

nathan