29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
8 babys 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ஆண் குழந்தை பிறக்கும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?

இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பிறப்பது இப்போது அரிதாகி வருகிறது. மாறி வரும் உணவுப்பழக்கம் வேலை முறைகளால் பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு பிள்ளைக்காக தவமாக தவமிருந்து லட்சக்கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கின்றனர். எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை நம் பெயர் சொல்ல ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். மகாலட்சுமியே மகளாக வந்து பிறந்து விட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது. யாருக்கு பெண் குழந்தை பிறக்கும் யோகம் இருக்கிறது என்று ஜாதகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜோதிட நூல்களில் எழுதியுள்ளனர்.

ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்த காரணத்தால் பல இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதில்லை. 90களில் பிறந்த பல இளைஞர்கள் திருமணம் நடைபெறாமல் சிங்கிள் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே பெண் கிடைத்து தாமதமாக திருமணம் நடைபெற்றாலும் குழந்தை பிறப்பு என்பது கடவுள் கொடுக்கும் வரமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒரு சில தம்பதியினருக்கு திருமணத்திற்குப் பின்னர் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ கழித்துதான் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. சோதனை குழாய் குழந்தை, செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பிறப்பது, தத்து எடுக்கும் பாக்கியம் மூலம் வாரிசு கிடைக்கும் யோகம் அமைகிறது. இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமரும் கிரகங்கள்தான் முடிவு செய்கின்றன.

8 babys 1

வாரிசுக்கு காரணமாகும் கிரகங்கள்

ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில்லை. ஒரு சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு எல்லாம் என்ன காரணம்? மனிதர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது பற்றி அவர்களின் ஜாதகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

குருபகவான்

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் இடத்தில் இருந்து எண்ணி வரும் ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். நம்முடைய முன் ஜென்ம பாவம் அல்லது புண்ணியம்தான் நமக்கு புத்திரர்களாக பிறக்கும் என்பதை உணர்த்தும் இடம்தான் பூர்வ புண்ணிய ஸ்தானம். அதே போல நவ கிரகங்களில் குரு பகவானுக்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. குரு புத்திர காரகன், அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர்.

செவ்வாய் தரும் குழந்தை பாக்கியம்

குரு இருக்கும் இடம் தவிர ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ஒருவரின் ஜாதகத்தில் மேஷம், விருட்சிகம், சிம்மம், மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் கிரகம் இருந்து குரு சேர்ந்தோ, பார்த்தோ இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

பெண் குழந்தை

5ம் இடம் பெண் ராசிகளாக அமைவது, 5ம் பாவத்தில் உள்ள கிரகம் பெண் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது, 5ம் பாவத்தில் சுக்கிரன்-சந்திரன் இருத்தல், 5ம் பாவாதிபதி 2 அல்லது 8ல் இருத்தால் பெண் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள். 5ம் அதிபதி பெண் கிரகமாகவும் அது பெண் ராசிகளில் இருந்தும்-பெண் ராசி நவாம்சத்தையும் அடைந்திருந்தால் முதலில் பெண் குழந்தையாக அந்த மகாலட்சுமியே மகளாக பிறக்கும் யோகம் உண்டு என்கின்றன ஜோதிட நூல்கள்.

சுக்கிரன் தரும் யோகம்

5ம் வீட்டில் சந்திரன்-சுக்கிரன் இருவரும் சேர்ந்து இருந்தால் முதலில் பெண் குழந்தை என்கின்றனர். ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். எத்தனை குழந்தைகள் 5ம் அதிபதி நவாம்சத்தில் எங்கு இருக்கிறாரோ அதிலிருந்து லக்னம் வரை எண்ணி எத்தனை ராசிகளோ அத்தனை ஆண். பெண் குழந்தைகள் உண்டு. மகாலட்சுமியின் வாசம் நம் வீட்டில் வீசும் யோகம் உண்டு என்று அறிந்து கொள்ளலாம்.

ஆண் குழந்தை யோகம்

5ம் பாவம் மேஷம், ரிஷபம், கடகமாக இருத்தல், 5ம் அதிபதி,5ம் பாவம்,சுப கிரக தொடர்பு-சேர்க்கை-பார்வை. ஐந்தாம் பாவத்தில் உள்ள கிரகம் ஆண் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது. குரு பகவான் சுபக் கிரக சேர்க்கை-தொடர்பு. லக்னம் அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 5மிடம் சுப ராசியாகி,அதில் சுபகிரகம் இருத்தல். 5ம் பாவம் ஆண் ராசிகளாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். 5ம் அதிபதி ஆண் கிரகமாகவும் அது ஆண் ராசிகளில் இருந்தும்,ஆண் ராசி நவாம்சடைந்திருந்தால் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

புத்திர தோஷம்

ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம் ஆகும். ஐந்தாம் வீட்டில் நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை ஏற்படும் அமைப்பாக கூறப்படுகிறது. ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு.

குழந்தை பிறப்பதில் தாமதம்

ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம். ஆண்கள் ஜாதகத்தில் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.

கர்ப்ப சிதைவு ஏன் எப்படி?

பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து கோச்சார ரீதியாக அதை செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு ஏற்படும் அமைப்பாக கூறப்படுகிறது. குழந்தை பிறப்பதில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும். கருவின் வளர்ச்சிக்கு உதவும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பராட்சாம்பிகை அம்மனை சரணடைவதன் மூலம் கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து இந்த உலகத்தை பார்க்க வைக்கலாம். சந்தான கோபால யாகம் செய்து புத்திரபாக்கியம் பெறலாம்.

Related posts

கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்.! ஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..

nathan

கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர்!…

sangika

இந்த 6 ராசிக்காரர்கள் எப்பவும் சுத்தமாவே இருக்க மாட்டாங்களாம்!

nathan

உங்க கணவன்கிட்ட மட்டும் இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க வாழ்க்கையே நரகமாகிடுமாம்..!

nathan

குழந்தைகளில் தூக்கக் கோளாறுகளை சுட்டிக்காட்டும் இந்த அறிகுறிகளைக் கவனிப்பது உங்களுக்கு மிகவும் அவசியம்.

nathan

தாய்ப்பால் கொடுப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது

nathan

உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரக கற்களால் வலி, வேதனையா..? இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.

nathan

உடல்வலி குறைய.. மட் தெரப்பி…

nathan

நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க…

nathan