625.500.560.35
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா?

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.

நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும்.

வெந்நீர் அருந்துவதைக் காட்டிலும் குளிர்ந்த நீர் அருந்துவதே நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை காட்டிலும் அதிகம்.

தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன்செய்து, வயிற்றை சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாக குறைக்க முடியும்.

முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம்.

வெந்தயம்
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வரபிரசாதம் வெந்தயம். உடல் சூட்டை தணிக்கும் அருமருந்து இதுதான்.

வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வெந்தயத்தை ஊறவைக்காமல் அப்படியே தண்ணீருடனோ அல்லது மோருடனோ சாப்பிடுவது கூடாது.

அருகம்புல்
அருகம்புல்லின் தண்டு மட்டும்தான் மருத்துவகுணம் கொண்டது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனை பகுதியானது நச்சு தன்மை கொண்டதால் வயிற்று போக்கை ஏற்படுத்திக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலேயே அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

இஞ்சி
இஞ்சியில் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சி தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறைப்பதோடு, நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால் வாய்ப்புண், வயிற்றிப்புண் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

நெல்லிக்காய்
மேலும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. இவற்றுடன் மோர் சேர்த்து குடிப்பது நல்லது.

 

Related posts

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan

கரு-த்தரிப்பை இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

nathan

தினம் ஒரு நாட்டு கோழி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இத படிங்க கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல்லி இந்த திசையிலிருந்து சத்தங்களை எழுப்பினால் கெட்ட செய்தி வரக்கூடும்

nathan

அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு. நுரையீரல் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியவை.!

nathan

தலை சீவும் போது யோசிக்க வேண்டியவை

nathan

உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா…ஷாக் ஆகாதீங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan