33.4 C
Chennai
Monday, Oct 28, 2024
30 1430378323 12 drinking water 600
ஆரோக்கிய உணவு

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் என்ன நன்மை என்று பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் ஏனோ தானோவென்று தினமும் கடமை போன்று பின்பற்றுவார்கள்.

இப்படி ஒரு செயலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியாமலேயே பின்பற்றினால், அதன் மூலம் கிடைக்கும் நன்மைக்கு ஒரு அர்த்தமே இருக்காது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு இனிமேல் தண்ணீரைக் குடியுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த வெள்ளையணுக்களின் செயல்பாடு அதிகரித்து, நோய்களின் தாக்கம் குறையும். மேலும் தண்ணீர் குடித்து வந்தால், உடலியக்கம் அனைத்தும் சீராக நடைபெறும்.

பொலிவான சருமம்

தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமமே பொலிவோடு காணப்படும்.

எடையைக் குறைக்கும்

காலையில் எழுந்ததும் 2 டம்ளர் நல்ல குளிர்ச்சியான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசமானது காலையில் வேளையில் 24% அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

புதிய ரத்த அணுக்கள்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், புதிய இரத்தணுக்கள் மற்றும் தசை செல்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

குடல் சுத்தமாகும்

காலையில் எழுந்தும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம், குடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, குடல் சுத்தமாகி, உண்ணும் உணவுகளின் மூலம் கிடைக்கும் சத்துக்களை உடலானது எளிதில் உறிஞ்சும்.

Related posts

தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

சுவையான வாழைப்பழ பிரட் ரெசிபி

nathan

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இத சாப்பிடுங்க!

nathan

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பாதாம்…

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

உங்களுக்கு தெரியுமா தண்ணீரைக் கொண்டு இவ்வளவு வியாதிகளைக் குணப்படுத்த முடியுமா??

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணிலடங்காத நோய்களுக்கு மருந்தாகும் சோளக்கருதின் நார்!

nathan

சிவப்பு அவலில் சத்தான டிபன் செய்யலாம் வாங்க…

nathan

டயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்!

nathan