25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
juice 15
ஆரோக்கிய உணவு

தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் கோடிக்கணக்கான மக்கள் இன்று உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அது பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். அவையாவன, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம்.

உயர் இரத்த அழுத்தம் ஒரு கார்டியோவாஸ்குலர் பிரச்சனை. இப்பிரச்சனை உள்ளவர்களின் தமனிகளில் பாயும் இரத்தம் தமனியின் சுவர்களில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுப்பதால், இதயத்தின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடனடியாக அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு தினமும் மாத்திரைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஒரு அற்புதமான மற்றும் சுவையான பானத்தின் உதவியுடனும் கட்டுப்படுத்தலாம். இக்கட்டுரையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பசலைக்கீரை வாழைப்பழ ஸ்மூத்தி

வீட்டிலேயே எளிமையான முறையில் சுவையான ஒரு ஸ்மூத்தியைத் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாக குறைக்கலாம். இந்த ஸ்மூத்தியானது பசலைக்கீரை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு தயாரிக்கக்கூடியது. நிச்சயம் இந்த ஸ்மூத்தி விரும்பி குடிக்கும் வகையில் சுவையானதாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கத் தேவையான பொட்டாசியம் சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 358 மிகி பொட்டாசியம் உள்ளது. மேலும் வாழைப்பழத்தில் ஜிங்க் சத்து நிரம்பியுள்ளது.

பசலைக்கீரை

பசலைக்கீரையும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதிலும் பொட்டாசியம் அதிகளவில் நிரம்பியுள்ளது. அதுவும் 100 கிராம் பசலைக்கீரையில் 558 மிகி பொட்டாசியம் உள்ளது என்றால் பாருங்கள். அதுமட்டுமின்றி, பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது என்பதால், இது நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

ஸ்மூத்தி தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 2

* பசலைக்கீரை – 1 கப்

* ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்

* ஸ்ட்ராபெர்ரி அல்லது அன்னாசி – சிறிது (விருப்பமிருந்தால்)

* ஆளி விதை / சியா விதை / பூசணி விதை – 1/2 டீஸ்பூன்

ஸ்மூத்தியின் செய்முறை:

* வாழைப்பழங்களின் தோலை நீக்கிவிட்டு, பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஆரஞ்சு ஜூஸையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பசலைக் கீரையை நீரில் அலசி சேர்த்து, 1/2 கப் நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு விருப்பமிருந்தால், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்ற பழங்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

1 smoothie 15
* இறுதியில் அரைத்த ஸ்மூத்தியை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஆளி விதை அல்லது பூசணி விதை அல்லது சியா விதைகளைத் தூவி குடிக்கவும்.

நன்மைகள்:

வாழைப்பழ பசலைக்கீரை ஸ்மூத்தி உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த ஸ்மூத்தியை சாதாரணமாக ஒருவர் குடித்து வந்தால், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வாழைப்பழ மற்றும் பசலைக்கீரையில் புரோட்டீன்கள் உள்ளது. மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமான அளவில் நிறைந்துள்ளது.

Related posts

வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய்

nathan

பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட ‘இந்த’ விஷயங்கள செஞ்சிடாதீங்க…

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

nathan

உங்களுக்கு சீக்கிரம் தொப்பையை குறைக்கணுமா? இதோ எளிய நிவாரணம்….

nathan

வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

nathan

அறிந்து கொள்ள..உடலில் ரத்தம் அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

nathan

50 கலோரிகள் கீழ் உள்ள உணவுகள்

nathan