சிற்றுண்டி வகைகள்

மும்பை ஸ்டைல் பேல் பூரி

மாலை வேளையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது மும்பை ஸ்டைல் பேல் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


18 1439896503 mumbai style bhel puri
தேவையான பொருட்கள்:

பொரி – 1 கப்
ஓமப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை – 4
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி சட்னி – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியா கவைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button