31.9 C
Chennai
Monday, May 19, 2025
3887 6115
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ் ! நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் தயிரின் முக்கிய பங்கு!!

தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது நல்லதாகும். லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம்.
கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது.

தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும். காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது.

பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும். உப்பு அல்லது சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும்.

ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம். தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும்.

பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும்.3887 6115

Related posts

தெரிஞ்சிக்கங்க…இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

இலவங்கப்பட்டை எண்ணெயின் ஆச்சரியமான நன்மைகள்

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்

nathan

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

nathan

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika