கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் ஜோடியாக கைகோர்த்து திருமண நிகழ்வில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இதையடுத்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து நடிகர் ரவிமோகனும் அறிக்கை வெளியிட்டு, தன் மனைவியை பிரிவதற்கான காரணத்தை தெரிவித்திருந்தார். அதில், “இத்தனை வருடங்களாக என்னை முதுகில் குத்தினார்கள். இப்போது என்னை நெஞ்சில் குத்தியதற்காக சந்தோஷப்படுகிறேன். என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி. குடும்பத்தை பிரித்தவள், பணப் பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மவுனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram