31.9 C
Chennai
Monday, May 19, 2025
tyu
தலைமுடி சிகிச்சை

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… !

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… !

tyu

சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்… போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.

வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும்’ என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.

சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.

பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, ’பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

சிலர் தொடர்ந்து தலைக்கு டை அடித்துக்கொள்வார்கள். கேட்டால், ‘இயற்கையான மூலிகை டைதான் போடுகிறோம்’ என்பார்கள். 100 சதவிகித ‘மூலிகை டை’ என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே! எனவே, டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும். அதைத் தவிர்ப்பதே நல்லது.

Related posts

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

nathan

கருகரு கூந்தலுக்கு கறிவேப்பிலை

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச்செய்யும் கறிவேப்பிலை

nathan

வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இயற்கை மசாஜ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான கூந்தலுக்கு இயற்கைக் குறிப்புகள்

nathan

கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்?

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan

இளநரைக்கு எளிய வீட்டு வைத்தியம்

nathan