32.2 C
Chennai
Monday, May 20, 2024
3 menshair8 01 1478001357
தலைமுடி சிகிச்சை

ஹேர் ட்ரையரால் முடி உதிர்வதற்கு நாம் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம் என்று தெரியுமா?

தற்போது யாருக்கு தான் தலைமுடியை இயற்கையாக காய வைப்பதற்கு நேரம் இருக்கிறது. அனைவரது வீட்டிலும் ஹேர் ட்ரையர் உள்ளது. அதே சமயம் பலரும் ஹேர் ட்ரையர் தலைமுடியை அதிகம் உதிரச் செய்யும் என்று சொல்வதால், அதைப் பயன்படுத்த அஞ்சுகிறார்கள்.

ஆனால் தலைமுடி உதிர்வதற்கு நாம் அதைத் தவறாக பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். நமது எந்த தவறான செயல்கள் ஹேர் ட்ரையரால் தலைமுடியை உதிரச் செய்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தவறு #1
ஹேர் ட்ரையரின் நுனிப்பகுதி மிகவும் முக்கியமானது என்று தெரியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் அதை நீக்கிவிடுகின்றனர். ஏனெனில் அதிலிருந்து வெளிவரும் சூடான காற்றினை அளவை மிதமாக வெளிவிடுவதால் தான். ஆனால் அது தான் தலைமுடிக்கு நல்லது. இல்லாவிட்டால், மிகுந்த சூடான காற்று தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதித்து, தலைமுடியை வறட்சியடையச் செய்வதோடு, தலைமுடியை உதிரச் செய்யும்.

தவறு #2
அதிக சூட்டில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது. எப்போதும் ஹேர் ட்ரையரை குறைவான வெப்பத்தில் தான் பயன்படுத்த வேண்டும். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

தவறு #3 தலைமுடியில் இருந்து தண்ணீர் சொட்டசொட்ட ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது தலைமுடிக்கு நீங்கள் செய்யும் கேடுகளில் ஒன்று. எப்போதும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தும் முன், துணியால் தலைமுடியைத் துடைத்துவிட்டு, பின்பு தான் பயன்படுத்த வேண்டும்.

தவறு #4 நேரமாகிவிட்டது என்று அரைகுறையாக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தாமல், முழு ஈரமும் போகும் வரை ஹேர் ட்ரையரைப் பயன்படுத்த வேண்டும்.

தவறு #5 ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது, பிளாஸ்டிக் அல்லது மெட்டல் சீப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தலைமுடி அதிக வெப்பத்தால் கருகும் வாய்ப்புள்ளது. எனவே மென்மையான முட்களைக் கொண்ட சீப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்.

3 menshair8 01 1478001357

Related posts

தலை அரிப்பை போக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

nathan

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

nathan

அட்டகாச ‘ஹேர் மாஸ்க்குகள் கூந்தலை பொலிவடைய…

nathan

இந்த எண்ணெயை எலுமிச்சை சாறுடன் மசாஜ் செய்க.. பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan

சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய

nathan

ஹேர் மாஸ்க்கை மட்டும் நைட் யூஸ் பண்ணுனீங்கனா… உங்களுக்கு முடி கொட்டவே கொட்டாதாம்!

nathan

முடி நன்கு வளர

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

nathan