கர்ப்பிணி பெண்களுக்கு

எச்சரிக்கை! கர்ப்பிணிகளே இந்த விஷயங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள்!

இன்றைய நவீன வாழ்க்கையில், நமக்கு கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பல்வேறு விதமான இரசாயனங்கள் கலந்துள்ளதால், குழந்தைகளுக்கு ஆட்டிஸம், துரித கவனக்குறைவு குறைபாடு (ADHD) மற்றும் டிஸ்லெக்ஸியா போன்ற மனரீதியான பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு பாதுகாப்பற்ற தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்கள் கலந்த உணவுப் பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், இந்த இரசாயனங்கள் குழந்தைகளின் இரத்தத்திலும் கலந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரசாயனங்கள் குழந்தைகளின் மூளையில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

பெரும்பாலான குழந்தைகள் மனநலம் குன்றிய வகையில் பிறந்து வரும், இன்றைய நாட்களில் கவனிக்கப்பட வேண்டியதொரு தலையாய விஷயமாக இது உள்ளது. எனவே, சாதாரணமாக சாப்பிடக் கூடிய சில பொருட்களில் மறைந்துள்ள நச்சுப் பொருட்களை கர்ப்பிணிகள் சற்றே சிரத்தை எடுத்து கண்டு கொள்ள வேண்டியுள்ளது.

இந்த கட்டுரையைத் தொடர்ந்து படித்து, சாதாரணமாக தோற்றமளித்து உங்களுடைய குழந்தைகளைப் பாதிக்கும் இந்த இராசயனப் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ளோரைடு – குறைவான சிந்திக்கும் திறன்

டூத் பேஸ்ட், தண்ணீர், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் ப்ளோரைடு காணப்படலாம். நீங்கள் குடிக்கக் கூடிய தண்ணீர் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ள ப்ளோரைடின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுடைய குழந்தையின் மூளை வளர்ச்சியின் அளவை பாதித்து சிந்திக்கும் திறனை குறைத்து விடும்.

ஈயம் – குறைபாடுடைய மன வளர்ச்சி

அழகு சாதனப் பொருட்கள், தண்ணீர் மற்றும் செய்தித் தாள்களில் ஈயம் காணப்படுகிறது. லிப்ஸ்டிக் பயன்படுத்துதல், சில வகையான இராசயான ஷாம்புகள் போன்றவற்றால் உங்களுடைய உடலில் ஈயத்தின் அளவு அதிகரிக்கலாம். ஈயத்தின் காரணமாக குறைவான மன வளர்ச்சியும், பிறப்பு குறைபாடுகளும் மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகளும் ஏற்படக்கூடும். ஜாக்கிரதை வருங்கால தாய்மார்களே!

மெர்குரி – மூளை வளர்ச்சி குறைபாடுகள் மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகள்

கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் அதில் கலந்துள்ள மெர்குரி உடலில் சேர்வதை தவிர்க்க முடியும். ஏனெனில், அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிப்பதால், குழந்தைக்கு மன ரீதியான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய இராசயனங்களில் ஒன்றாகும். எனவே, கர்பப காலத்தில் மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஆர்சனிக் – நினைவாற்றல் மற்றும் கற்றல் குறைபாடுகள்

மண்ணில் கலந்துள்ளதால் குடிக்கும் தண்ணீரிலும், சில காய்கறிகளிலும் ஆர்சனிக் இரண்டற கலந்திருக்கும். எனவே காய்கறிகளை நன்றாக கழுவிடவும் மற்றும் தண்ணீரில் கலந்துள்ள ஆர்சனிக் அளவினை பரிசோதிக்கவும். ஏனெனில், குழந்தைகளின் நடத்தை மற்றும் கற்றல் தொடர்பான விஷயங்களை ஆர்சனிக் பாதிக்கிறது.

பூச்சி மருந்துகள் – மனரீதியான பிறழ்வுகள்

DDT மற்றும் பிற வகையிலான இரசாயன பூச்சிக் கொல்லிகள் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு விதமான மன ரீதியான பிரச்சனைகள் வரக் காரணமாக உள்ளன. எனவே, கர்ப்பமாக இருக்கும் பெண்மணிகள் அவர்கள் சாப்பிடக் கூடிய அனைத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நன்றாக கழுவி விட்டு, இந்த பூச்சிக் கொல்லிகளின தாக்கம் குறைந்த பின்னர் சாப்பிடவும். அல்லது இயற்கை முறையில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடத் தொடங்கவும்.

டொலுவீன் – கவனக் குறைவு குறைபாடு

நைலான், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலிதீன், நெயில் பாலிஷ், டை போன்றவற்றில் டொலுவீன் (Toluene) உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தையும் கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும். ஏனெனில் குழந்தைகளின் கவனத்தை சிதைக்கக் கூடியவைகளாக இவை உள்ளன.

பாலிகுளோரினேடட் பைபெனைல்ஸ்

(PCB) – மோசமான நினைவாற்றல் இந்த இரசாயனம் சிலவகை மீன்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ளது. அது குழந்தைகளின் மன வளர்ச்சியை குறைக்கிறது மற்றும் இந்த பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகள் நினைவு கொள்வதிலும், நிகழ்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தி சொல்வதிலும் குறை உள்ளவர்களாக உள்ளார்கள்.

12 1455275546 7 weakmemory polychlorinatedbiphenylspcb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button