எடை குறைய

எடை குறைக்க இனிய வழி!

‘எடை குறைக்க லேட்டஸ்ட்டாகஏதாவது வழி இருக்கிறதா’ என்று கேட்கிறவர்களுக்கான பக்கம் இது! ‘உங்கள் மனதுக்குப் பிடித்த பார்ட்னரோடு அடிக்கடி கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுங்கள். எடை குறைந்துவிடும்’ என்கிறது Journal psychological reports வெளியிட்டிருக்கும் ஆய்வு!

பார்ட்னரோடு டின்னர் சாப்பிட்டால் எடை குறையும் என்பதற்கு என்ன காரணம்? அதுவும் கேண்டில் லைட் டின்னர்? நமக்கு எழும் சந்தேகங்களுக்குத் தாங்கள் நடத்திய ஆய்வையே பதிலாக அளிக்கிறார்கள் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். எடை கூடுவது உணவினால் மட்டும் அல்ல… வேறு காரணங்களும் இருக்க வேண்டும் என்று யோசித்த ஆய்வாளர்கள், பிரபல உணவகமான ஹர்தீஸ் ரெஸ்டாரன்டை இதற்காகத் தேர்வு செய்தார்கள். ரெஸ்டாரன்டின் ஒருபகுதி அதிக வெளிச்சம், ஹை டெசிபல் பாட்டு, வழக்கமான சப்தங்கள் என இருந்தது.

மற்றொரு பகுதியை குறைவான வெளிச்சம், மிதமான இசை, செடிகள், பெயின்டிங்ஸ், அழகான டேபிள் கிளாத் என ரசனையாக மாற்றினார்கள்.வழக்கமான பகுதியில் சாப்பிட்டவர்களைவிட, மாற்றப்பட்ட புதிய பகுதியில் 175 கலோரி குறைவாகவே சாப்பிட்டார்கள். ஆர்டர் செய்யப்பட்ட உணவு மாறாவிட்டாலும், சாப்பிடும் முறையும் ரசித்து ருசிக்கும் மனோபாவமும் இடத்துக்கேற்ப மாறுகிறது என்பதை இதிலிருந்து தெரிந்துகொண்டார்கள்.

”அதிக வெளிச்சமும் சத்தமும் நிறைந்த இடங்கள் ரிலாக்ஸ்டான மனநிலையைத் தருவதில்லை. இதன் காரணமாகவே அதிகம் சாப்பிடும் மனநிலை ஏற்படுகிறது. அதே உணவை வெளிச்சம் குறைந்த அறையில், இனிமையான இசையோடு, ரம்மியமான சூழலில் சாப்பிடும்போது குறைவாக சாப்பிட்டாலும் திருப்தியாக உணர்கிறார்கள்” என்கிறார் ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பிரையன் வான்சிங். இவர் Mindless Eating என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

உணவகங்களைப் போலவே பல வீடுகளிலும் அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற ஆரோக்கியமற்ற சூழல் இருக்கிறது. சாப்பிடும் அறையைகொஞ்சம் மாற்றினால் வீட்டிலேயே இந்தப் பலனைப் பெற முடியும். ஒரே ஒரு பிரச்னைதான்… இருக்கிற விலைவாசியில் ஹோட்டலில் தினம் தினம் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட முடியுமா என்ன?

ht4263

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button