31.1 C
Chennai
Monday, May 20, 2024
mutton chilli roast 1632572116
ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ

* உப்பு – சுவைக்கேற்ப

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* சோம்பு – 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 6 பல்

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

* பூண்டு – 5 பல்

* வரமிளகாய் – 5

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய மட்டனை ஒரு குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, தக்காளி, அரைத்த பச்சை மிளகாய் பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் வேக வைத்துள்ள மட்டனை, அதில் உள்ள நீருடன் சேர்த்து கிளறி, நீர் முற்றிலும் வற்றியதும், அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட் தயார்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? மூன்றுநாளில் ஃப்ரஷ்

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு முழு ஆரோக்கியமும் கிடைக்க, கர்ப்ப காலத்தில் நீங்க இதை சாப்பிட்டே ஆகனும்!

nathan

அவசர வாழ்க்கைக்கு நடுவில் சந்தோஷமாக இருக்க உதவும் 6 காலை நேர டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

nathan

முதுகு வலி குறைய…

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

nathan

வியர்வையை தடுக்கலாம்

nathan

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

sangika

வாழைத்தண்டு சூப்…இவ்வளவு ஈசியா?

nathan