ஆரோக்கியம் குறிப்புகள்

அவசர வாழ்க்கைக்கு நடுவில் சந்தோஷமாக இருக்க உதவும் 6 காலை நேர டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

இன்றைய உலகம் எவ்வளவோ மாறி விட்டது. சென்ற தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் இடையே எவ்வளவு மாற்றங்கள். அதுவும் வளர்ந்து வரும் மெட்ரோபாலிட்டன் நகரமான பெங்களூரு போன்றவைகளில் எல்லாம் கேட்கவே தேவையில்லை.

இன்றைய அதிவேக உலகத்தில் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதனால் எப்ப்தும் டென்ஷன் மற்றும் மன அழுத்தம் வந்து சேர்கிறது.

இருப்பினும் இந்த அவசரமான வாழ்க்கைக்கு நடுவிலும், சந்தோஷமாக இருந்து, மன அழுத்தத்தை குறைக்க உங்களுக்காக நாங்கள் சில எளிய டிப்ஸ்களை வழங்க உள்ளோம்.

திரைச்சீலைகளை பாதியாக திரண்டு வைத்து தூங்கவும்

இது மிகவும் எளிமையான வழிமுறையாகும். அதற்கு காரணம் உங்களுக்கு உழைக்க உங்கள் உடலுக்கு வழிவகுத்துக் கொடுக்கிறீர்கள். இயற்கையான அதிகாலை சூரிய ஒளி ஜன்னல் வழியாக உள்ளே வரும்படி செய்வதால் மெலடோனின் உற்பத்தியை குறைக்க உங்கள் உடலுக்கு சிக்னல் கிடைக்கும். மேலும் அட்ரினாலின் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனால் காலை அலாரம் அடிக்கும் போது நீங்கள் பாதி விழித்திருப்பீர்கள். இதனால் திடீரென அலறி அடித்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

15 நிமிடங்களுக்கு முன்னதாகவே அலாரமை செட் செய்திடுங்கள்

இது உங்களுக்கு பொன்னான 15 நிமிடங்களை வழங்கும். இதனால் அவதி அவதியாக படுக்கையை விட்டு எழுந்து ஓடுவதற்கு பதிலாக, நீட்டி நெளித்து சற்று மெதுவாக எழுந்திருக்கலாம். மெதுவாக உங்கள் உடலில் உள்ள கடிகாரம் அலாரம் கடிகாரத்துடன் சேர்ந்து விடும்.

முடிவு எடுப்பதை எல்லாம் விட்டு விட்டு மனதை அமைதியாய் விடுங்கள்
முடிவு எடுப்பதை எல்லாம் விட்டு விட்டு மனதை அமைதியாய் விடுங்கள்
முடிவுகள் எடுப்பது, அது எவ்வளவு எளிய ஒன்றாக இருந்தாலும் சரி, ஒரு வகையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதனால் இதனை தவிர்க்க, நீங்கள் என்ன உடுத்த போகிறீர்கள், என்ன உண்ண போகிறீர்கள், மறு நாளைக்கான உங்களின் ஒட்டுமொத்த திட்டங்கள் ஆகியவற்றை தூங்க செல்வதற்கு முன்பே முடிவு செய்து விடுங்கள். இதனை வழக்கமாக்கி கொண்டால் இது வலுவடையும். இதனால் நீங்கள் எடுக்கும் பல முடிவுகளின் எண்ணிக்கைகளும் குறையும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இசையை கேளுங்கள் அல்லது தனிமையில் நேரத்தை செலவிடுங்கள்
இசையை கேளுங்கள் அல்லது தனிமையில் நேரத்தை செலவிடுங்கள்
உங்கள் மனதுக்கு நிம்மதியையும் அமைதியையும் எது அளிக்கிறதோ, அவற்றில் 10-15 நிமிடங்கள் தவறாமல் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளரின் பாடல்களை கேட்பதாக இருக்கட்டும் அல்லது புத்தகம் படிப்பதாக இருக்கட்டும்; அப்படி செய்கையில் நாள் முழுவதும் உழைக்க போகும் உங்களுக்கு, உங்களுக்கென சற்று நேரம் கிடைக்கும்.

30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி

உடற்பயிற்சிகள் செய்வதால் உடல்நல பயன்கள் இருக்கிறது என்பதை கூற வேண்டியதில்லை. ஆனால் காலையில் செய்வதால் குறிப்பிட்ட இரண்டு பயன்கள் உள்ளது. கண்டிப்பாக அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலையில் உடற்பயிற்சி செய்யும் போது, பகல் நேரத்தில் இருப்பதை போல் எந்த ஒரு தொந்தரவுகளும் இருக்காது. அதனால் நீங்கள் தொந்தரவில்லாமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபடலாம். மேலும் எண்டார்ஃபின்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும்.

வெளியில் செல்வதற்கு முன்பு உங்கள் மனம் கவர்ந்தவர்களை முத்தமிட்டு செல்லுங்கள்
வெளியில் செல்வதற்கு முன்பு உங்கள் மனம் கவர்ந்தவர்களை முத்தமிட்டு செல்லுங்கள்
உங்கள் பெற்றோர்கள், கணவன்/மனைவி, குழந்தைகள், ஏன் உங்கள் செல்லப்பிராணிகளுடன் மனது ஒன்றி இருக்கும் போது, உங்கள் நாள் இனிமையாக தொடங்கும். உங்கள் மனது நிறைந்திருக்கும். இதனால் அந்த நாள் முழுவதும் உங்களால் சிறப்பாக செயலாற்ற முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button