33.9 C
Chennai
Thursday, May 15, 2025
08 botle gourd
ஆரோக்கிய உணவு

சுவையான சுரைக்காய் குருமா

உங்களுக்கு சுரைக்காய் பிடிக்காதா? அதற்கு காரணம் அதனை சரியான முறையில் சமைத்து சாப்பிடாதது தான் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் சுரைக்காயை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் சுரைக்காயை குருமா செய்து சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சுரைக்காய் குருமா செய்யத் தெரியுதா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இங்கு சுரைக்காய் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Bottle Gourd Kurma
தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 1/4 கிலோ
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 அல்லது மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சுரைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சுரைக்காய் நன்கு வேகும் வரை 7-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் 4-5 முந்திரியை சேர்த்துக் கொண்டால், குருமா இன்னும் சுவையாக இருக்கும்.

இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சுரைக்காயுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுரைக்காய் குருமா ரெடி!!!

Related posts

கீழாநெல்லி உண்ணும் முறை

nathan

தெரிஞ்சிக்கங்க…உயிரை பறிக்கும் வெல்லம்…இந்த நிறத்தில் இருந்தால் பேராபத்து?

nathan

அற்புத நன்மைகள் ஏராளம்! 5 நாட்கள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுங்கள்!

nathan

ஆரோக்கிய நன்மைகள்..!! நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அகதி இலைகள்

nathan

வெந்தயம்… கசப்பு தரும் இனிமை!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ உணவுகள் போதுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

ஓட்ஸை எப்படி உப்புமா போன்று செய்து சாப்பிடுவது?

nathan

பருப்பு கீரை சாம்பார்

nathan