சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு டோக்ளா செய்து கொடுக்கலாம். இன்று கேழ்வரகு டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – முக்கால் கப்,
ரவை – கால் கப்,
கடலை மாவு – கால் கப்,
புளித்த தயிர் – அரை கப்,
ஃப்ரூட் சால்ட்(Fruit Salt) – ஒரு தேக்கரண்டி,
உப்பு – ருசிக்கேற்ப,
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டி,
கடுகு, உளுந்து – தலா கால் தேக்கரண்டி,
பச்சைமிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
தேங்காய்த்துருவல் – 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு, வறுத்த ரவை, தேவையான உப்பு, புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட், ஆப்ப சோடா போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி மாவுப் பதத்துக்கு மாவு இருக்க வேண்டும்.

* ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து வேகவைத்த கேழ்வரகு துண்டுகள் மேல் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான சத்தான கேழ்வரகு டோக்ளா ரெடி.201702011041372751 how to make Ragi dhokla SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button