மழை பெய்யும் போது சூடாக ஏதேனும் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், மிகவும் சுவையாகவும், ஆரோக்கியத்தை வழங்கும் மூலிகைத் தேநீர் செய்து குடியுங்கள். இதனால் உங்களுக்கு ஜலதோஷம், இருமல் போன்றவை இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். மூலிகைத் தேநீர் என்றதும் என்ன மூலிகை பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்.
வீட்டில் உள்ள இஞ்சி, எலுமிச்சை, தேன் கொண்டு தான் தயாரிக்கப் போகிறோம். இந்த தேநீர் உடலுக்கு புத்துணர்ச்சியும் வழங்கும். சரி, இப்போது அந்த மூலிகை தேநீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
இஞ்சி – 1 இன்ச்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து, இஞ்சியில் உள்ள சாறு நீரில் இறங்கியதும், அதனை இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ ரெடி!!!