30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான கேழ்வரகு பக்கோடா

பொதுவாக, வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று பக்கோடா.

இப்போது மாலையில் சூடான தேநீருக்கு சுவையான பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கேழ்வரகு பக்கோடா தேவையானவை

கேழ்வரகு மாவு – 100 கிராம்

அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்

தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – சிறிய துண்டு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

உற்பத்தி முறை

முதலில் கேழ்வரகு பக்கோடாவிற்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை என்பவற்றை பொடியாக்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒரு பவுலில் கேழ்வரகு மா, அரிசி மாவு, தயிர் மற்றும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , இஞ்சி – கறிவேப்பிலை என்வற்றை ஒன்றாக சேர்த்து பினைய வேண்டும். அதில் தேவையானளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனை 5 நிமிடங்கள் சூடாக விட்டு, எண்ணெயில் பக்கோடா மாவை சிறிய துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொறித்தெடுக்க வேண்டும்.

தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேழ்வரகு பக்கோடா தயார்..!

Related posts

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

சுவையான மீன் கட்லெட்

nathan

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

ப்ராங்கி ரோல்

nathan