29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்களுக்கு இந்த சிவப்பரிசி – அவல் கொழுக்கட்டை மிகவும் நல்லது. இன்று இந்த கொழுக்கட்டையின் செய்முறையை பார்க்கலாம்.

சத்து நிறைந்த சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

சிவப்பரிசி – ஒரு கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
சிவப்பு அவல் – கால் கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 6,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய், – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* சிவப்பரிசி, துவரம்பருப்பு, சிவப்பு அவல், காய்ந்த மிளகாயை நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து… அடைபதத்தில் கொரகொரப்பாக அரைக்கவும் (பாதி அரைபடும் போது தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்).

* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

* நன்றாக வெந்த பிறகு இறக்கவும்.

* பிறகு, மாவை கொழுக்கட்டை போல பிடித்து, இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

* சத்து நிறைந்த சிவப்பரிசி – அவல் கொழுக்கட்டை ரெடி.

Related posts

சிவப்பு அரிசி – தக்காளி தோசை

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

மனோஹரம்

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

சூப்பரான மினி சாம்பார் இட்லி செய்வது எப்படி

nathan

அரிசி ரொட்டி

nathan

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா

nathan