30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

சர்க்கரை நோயாளிகள் கோதுமையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை
தேவையான பொருட்கள் :

பீன்ஸ் – கால் கிலோ
வெங்காயம் – இரண்டு
வெங்காய தாள் – இரண்டு
கோதுமை மாவு – இரண்டு கப்
கரம் மசாலா – இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஐந்து தேகரண்டி
கடலை பருப்பு – ஐந்து தேகரண்டி
இட்லி மாவு – இரண்டு கரண்டி
மிளகாய் தூள் – இரண்டு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பீன்சை ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், வேக வைத்த பீன்ஸ், வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதை கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* அடுப்பில் தவாவை வைத்து மாவை அடை போல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

* பீன்ஸ் கோதுமை அடை ரெடி.

Related posts

அகத்திக்கீரை சொதி

nathan

இனிப்புச்சீடை

nathan

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

nathan

மும்பை ஸ்டைல் பேல் பூரி

nathan

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்

nathan

மினி பொடி இட்லி செய்வது எப்படி

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

nathan