32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். சாமை அரிசியை வைத்து சத்து நிறைந்த மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 500 கிராம்,
பாசிப்பருப்பு – 250 கிராம்,
இஞ்சி (துருவியது) – இரண்டு தேக்கரண்டி,
நெய் – 2 மேசைக்கரண்டி,
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
முந்திரி – 10 கிராம்,
சீரகம் – 2 தேக்கரண்டி,
மிளகு – 3 தேக்கரண்டி,
கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை அரிசியை கல் அரித்த பின் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

* குக்கரில் ஊறவைத்த சாமை அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும்.

* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்து வேகவைத்த சாமையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

* சுவையான சாமை மிளகு பொங்கல் தயார்.

Related posts

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

சிக்கன் போண்டா

nathan

பச்சை பாசிப்பருப்பு சீயம்

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan

சூப்பரான சிக்கன் போண்டா

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

உருளைக்கிழங்கு பொரியல்

nathan

சூடான மசாலா வடை

nathan

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan