ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளின் படிக்கும் திறனை தூண்ட வேண்டுமா. இதையும் படிங்க

குழந்தைகளின் ஒவ்வொரு நாள் பள்ளி பாடத்தை படிக்க வைக்க அம்மாக்கள் படும் பாடு மிகவும் கஷ்டமான செயலாகவே இன்றளவும் உள்ளது. எல்லாருக்கும் கல்வி என்பது நமது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்பது தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டமான விஷயமும் கூட . நாம் சிறு வயதில் வீட்டில் கற்று கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் தான் அவர்கள் பள்ளி செல்லும் போதும் அவர்களை மேம்படுத்த உதவும்.

நீங்கள் படிக்கும் ஆர்வத்தை வீட்டிலேயே உங்கள் குழந்தைகளுக்கு வளர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு பள்ளி சென்று பாடம் படிக்கும் எண்ணம் கூட வராது. உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி பெற்று செல்லும் போது அதிகம் படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

நம் கல்வித் திட்டமும் குழந்தைகளின் மேல் அதிகமான சுமையையும் அழுத்தத்தையும் வைத்து அவர்களை படிப்பதில் ஈடுபாடு இல்லாமல் ஆக்கி விடுகின்றன. புராஜெக்ட், அஷைன்மெண்ட் என்று குழந்தைகள் விளையாட கூட நேரம் இல்லாமல் ஆக்கி விடுகிறது.

ஏன் பெற்றோர்களாகிய நீங்களும் அவர்களின் மேல் பொதி மூட்டை மாதிரி சுமையை ஏத்தி விட்டு விடுகிறீர்கள். அவர்களின் படிக்கும் ஆர்வத்தை தானாக கொண்டு வர முயல வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக படிப்பதற்கான பிடித்தமான சூழ்நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்கி தர வேண்டும். அவர்கள் அவர்களின் முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் படிக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் எதிர்காலமும் சந்தோஷமாக அமையும்.

எனவே தான் நாங்கள் உங்களுக்கு சில ஐடியாக்களை தர உள்ளோம். இதன் படி உங்கள் குழந்தைகளின் படிக்கும் அறையை மேம்படுத்துங்கள். கண்டிப்பாக அவர்களுக்கு நீண்ட நேரம் படிக்கும் ஆர்வம் ஊக்குவிக்கப்படும். சரி வாங்க எப்படி படிக்கும் அறையை மேம்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

வெளிச்சம்

நீங்கள் உங்கள் குழந்தை எங்கே எந்த அறையில் படிக்க வேண்டும் என்று யோசித்து விட்டால் முதலில் அந்த அறையின் வெளிச்சத்தை தான் கவனிக்க வேண்டும். எனவே அந்த அறையில் அதிகமாக இயற்கை வெளிச்சம் படும் படி இருந்தால் நல்லது. நீங்கள் செயற்கை வெளிச்சமாக மின்சார விளக்கு போன்றவற்றை பயன்படுத்தினால் வெள்ளை நிற விளக்கு படிப்பதற்கு ஏற்றது. மற்ற நிற விளக்குகளை தவிர்ப்பது நல்லது.

பர்னிச்சர்

உங்கள் குழந்தைகள் படிக்கும் அறையிலோ அல்லது பகுதியிலோ அதிகமான வீட்டு பொருட்களை வைக்காதீர்கள். அது அவர்களின் படிக்கும் கவனத்தை சிதறடிக்கும். எனவே ஒரே ஒரு மேஜை மற்றும் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவான நாற்காலி இவைகள் இருந்தால் போதும். குழந்தைகள் அதிக நேரம் படிப்பார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

குளிரூட்டிகள் அமைத்தல்

நீங்கள் நகர் புறங்களில் வாழ்பவராக இருந்தால் வெயில் அதிகமான காலங்களில் குழந்தைகள் படிக்கும் அறையில் குளிரூட்டும் சாதனங்களை பொருத்தலாம். இவை கோடை காலத்தில் அதிக நேரம் படிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கும். குழந்தைகளால் நிறைய நேரம் கூட கவனம் சிதறாமல் படிக்க முடியும்.

சுவர்களின் நிறம்

குழந்தைகள் படிக்கும் அறையில் உள்ள சுவர்களுக்கு மீடியமான நிறங்களை தேர்ந்தெடுங்கள். அதிக கருப்பான அல்லது பளிச்சென்ற நிறங்கள் வேண்டாம். அழகாக ஒரு சுவரில் மிதமான உற்சாகமூட்டும் நிறங்களை வர்ணம் இடலாம். கண்டிப்பாக அறை முழுக்க அதைச் செய்து விடாதீர்கள்.

நூலகம் அமைத்தல்

உங்கள் குழந்தை வளர வளர அவர்களின் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு அவர்கள் பார்க்கும் விதத்தில் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும். சிறு வயதில் அவர்கள் கற்கும் நிறைய விஷயங்கள் தான் பெரியவர்கள் ஆனதும் அவர்களை முன்னேற்ற உதவும். ஏனெனில் புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பதை நாம் மறக்க முடியாது. எனவே குழந்தைகளுக்கு பிடித்தமான நிறைய வகையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகத்தை அவர்களுக்கு அழகாக அமைத்து கொடுங்கள்.

அமைப்பாக்குதல்

உங்கள் குழந்தைகள் படிக்கும் அறையில் அவர்களுக்கு சில வசதிகள் தேவைப்படும். அலமாரி, கரும்பலகை, பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் அமைப்புகள், கூடைகள், பெட்டிகள் போன்றவை பொருட்களை புத்தகங்களை வைக்க தேவைப்படலாம். எனவே அதை அவர்களுக்கு அமைத்து கொடுங்கள். மேலும் அந்த அறையை சுத்தமாக அடுக்கி க்ளீனாக வைத்து கொள்ளுங்கள்.

பொருத்தமான திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள்

குழந்தைகள் படிக்கும் அறையை வெளிச்சமாக, நல்ல காற்றோட்டமாக வைத்திருப்பது முக்கியம். அதே போல் அந்த அறையில் கணினி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து இருந்தால் அதன் வெளிச்சம் உங்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதோடு கண்களையும் பாதிப்படையச் செய்து விடும். எனவே இதற்கு தகுந்த திரைச்சீலைகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஒரு தனியான சூழலை உருவாக்கி கொடுங்கள்.

குடும்ப மரபு சார்ந்த பொருட்களை வைத்தல்

உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான குடும்ப மரபு சார்ந்த பொருட்களை அவர்கள் படிக்கும் அறையில் வையுங்கள். அது அவர்களின் படிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும். அது ஒரு விருதாகவோ அல்லது புத்தகமாகவோ கூட இருக்கலாம். இந்த படிக்கும் பழக்கம் குடும்பத்தில் இருப்பது அவர்களை உற்சாகப்படுத்தும்.

ஆர்வமாக்குதல்

உங்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை அவர்கள் அறையில் செய்யுங்கள். டிஸ்னி, பார்பி மற்றும் டோரா போஸ்டர்களை வைத்து அந்த அறையை அலங்கரித்து வையுங்கள். மோனோகிராம் ஓவியங்கள் போன்றவற்றை கொண்டு சுவர்களை அலங்கரியுங்கள்.

எலக்ட்ரானிக் பொருட்களை தள்ளி வையுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படாத எலக்ட்ரானிக் பொருட்களான கணினி, மடிக்கணினி போன்றவற்றை அந்த அறையிலிருந்து எடுத்து விடுங்கள். மேலும் அந்த அறையில் குறைந்த அளவு எலக்ட்ரானிக் பிளக் பாயிண்ட் வையுங்கள். ஏனெனில் அது உங்கள் குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button