35.2 C
Chennai
Saturday, Jun 1, 2024
seeds 1
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த வைட்டமின் உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் வைட்டமின்களில் வைட்டமின் இ- ம் உண்டு.

இதயத்தசைகள் ஆரோக்கியமாக இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுதல், அழற்சி மற்றும் கார்டியோவாஸ்குலார், என்னும் நோய் தடுத்தல், புற்றுநோய் பாதிப்பை குறைத்தல், இதய நோய், நீரிழிவு இருப்பவர்கள் வைட்டமின் இ போதுமான அளவு கொண்டிருந்தால் அதை கட்டுக்குள் வைக்க முடியும் என கூறப்படுகின்றது.

இதற்காக மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சில இயற்கை உணவுகளை தினசரி எடுத்து கொண்டாலே போதும்.

அந்தவகையில் வைட்டமின் இ அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

வேர்க்கடலை இதய நோய் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. குறிப்பாக பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது. எனவே அன்றாட உணவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்ப்பதன் மூலம் வைட்டமின் இ பெறமுடியும்.
உடல் மிக சோர்வாக இருக்கிறது. உடனடியாக ஆற்றல் வேண்டுமென்றால் தினமும் 8 பாதாமை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிட்டாலே போதும். தினம் 5 முதல் 8 வரை எடுத்துகொண்டால் உடலுக்கு வேண்டிய வைட்டமின் இ நிறைவாக கிடைக்கும்.
சூரிய காந்தி விதை சிறந்த நோய் எதிர்ப்புசக்தியாக இவை கருதப்படுகிறது. கூடுதலக இவை கல்லீரல் செயல்பாட்டை சீராக வைக்க துணைபுரிகிறது. சாலட் வகைகள், சூப், நொறுக்குத்தீனிகள் போன்று சாப்பிடலாம். .
வாரம் மூன்று அல்லது இரண்டு முறையாவது பசலைக்கீரையை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். அரைகப் அளவுள்ள கீரையில் தினசரி தேவைக்கான வைட்டமின் இ 16% நிறைந்துள்ளது.
நன்றாக பழுத்த ஒரு அவகேடோவில் வைட்டமின் இ அளவானது தினசரி தேவைக்கு 20% அளவு கிடைத்துவிடும்.இதிலிருக்கும் பொட்டாசியம் சத்துகள் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதால் இவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
ப்ரக்கோலி புரதம் மற்றும் வைட்டமின் இ நிறைந்த சிறந்த மூலாதார உணவாக பார்க்கப்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் ப்ரக்கோலி உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது .ப்ரக்கோலியை சூப் ஆக செய்து, கிரேவியாக செய்து சாப்பிடலாம்.

Related posts

7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிப்பது எப்படி?

nathan

நீண்ட நேரமா உட்கார்ந்து முதுகு வலி அதிகமா இருக்கா?

nathan

சுவையான ஆப்பிள் பஜ்ஜி

nathan

இந்த பிரச்சனை இருந்தா இளநீர் குடிக்காதீங்க?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!

nathan

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

குழந்தைகளை வளர்க்கும் விதத்திலேயே 4 விதமான பெற்றோர்கள் இருக்கிறார்களாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை சாப்பிட்டு பாருங்க…

nathan

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்!…

nathan