30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

நீண்ட நேரமா உட்கார்ந்து முதுகு வலி அதிகமா இருக்கா?

இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முதுகு வலி. குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு தான் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளது.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, அலுவலக பயணம், உடற்பயிற்சியின்மை போன்றவை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒன்று தான் முதுகு வலி.

இந்த முதுகு வலியைப் போக்க சரியான நிலையில் அமர்வதோடு, வலி இருக்கும் போது ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றி பாருங்கள். இதனால் நிச்சயம் முதுகு வலி நீங்கும்.

சூடம்

சூடத்தை பொடி செய்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, பாட்டிலில் ஊற்றி, வாரத்திற்கு 2 முறை அதனைக் கொண்டு இரவில் படுக்கும் போது மசாஜ் செய்தால் முதுகு வலி நீங்கும்.

யூகலிப்டஸ் ஆயில்

குளிக்கும் போது சுடுநீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து குளித்து வந்தால், அந்த நறுமணத்தால் முதுகு வலி, உடல் வலி என அனைத்து வலிகளும் நீங்குவதோடு, மன அழுத்தமும் நீங்கும்.

சுடுநீர் பேக் குஷன்

டிவி பார்க்கும் போது முதுகிற்கு ஏதேனும் மென்மையான குஷன் அல்லது சுடுநீர் பேக் வைத்துக் கொண்டு உட்கார்ந்தால், முதுகு வலியைப் போக்கலாம்.

கடுகு எண்ணெய்

குளிக்கும் முன் கடுகு எண்ணெய் கொண்டு முதுகை மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், முதுகு வலி நீங்கும்.

பால் மற்றும் மஞ்சள் தூள்

பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வரும் பழக்கத்தைக் கொண்டால், முதுகு வலி, உடல் வலி, சளி, இருமல் போன்றவையும் குணமாகும்.

இஞ்சி டீ

டீ தயாரிக்கும் போது அதில் சிறு துண்டு இஞ்சியை சேர்த்து குடித்து வந்தால், முதுகு வலி நீங்கும்.

மூலிகை எண்ணெய்

மூலிகை எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், கிராம்பு எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு முதுகை மசாஜ் செய்து வர, முதுகு வலி குணமாகும்.

குறிப்பு

முக்கியமாக அலுவலகத்தில் உட்காரும் போது, நேரான நிலையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் இப்படி செய்து வந்தால், முதுகு வலி வருவதைத் தடுக்கலாம்.

Related posts

அன்னையர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி பொடி

nathan

கருப்பையை எப்படி பாதுகாப்பது

nathan

ஆண்களே தெரிந்துகொள்ளுங்கள். 40 வயதுகளில் இருக்கும் பெண்கள் ஆண்களிடம் உண்மையாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலைகளை செய்தால் பெண்கள் உடல் எடையை குறைக்கலாம்.!

nathan

இவைகளை நீக்கினால் ஆரோக்கியம் கூடும்

nathan

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்

nathan

ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்! காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா?

nathan

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!, beauty tips in tamil

nathan