ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான ஆப்பிள் பஜ்ஜி

13 1423823391 apple bajji

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று சொல்வார்கள். அந்த அளவில் ஆப்பிளில் சத்துக்களானது நிறைந்துள்ளது. பொதுவாக ஆப்பிளை அப்படியே அல்லது ஜுஸ் போட்டு தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஆப்பிளை பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆப்பிள் பஜ்ஜி மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த ஆப்பிள் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Apple Bajji Recipe
தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1 (நீளமாக வெட்டியது)
கடலை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஓமப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடவை மாவு, மிளகாய் தூள், ஓமப்பொடி, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், ஆப்பிள் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, பஜ்ஜி மாவில் பிரட்டி, பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து ஆப்பிள் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான ஆப்பிள் பஜ்ஜி ரெடி!!!

Related posts

எண்ணெய் உணவுகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்….!

nathan

செட்டிநாடு வெள்ளை குருமா

nathan

கிச்சனில் இருக்கும் இந்த பொருட்களை உடனே தூக்கி வீசுங்க…

nathan

விரைவாக கருத்தரிக்க 7 விஷயங்கள்

nathan

உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள…

nathan

உடலின் வெப்பத்தை தணிக்கும் தேநீர் வகைகள்!…..

nathan

உங்களுக்கு அதிகமா வியர்வை வெளியேற காரணம் என்னவென்று தெரியுமா????

nathan

தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

nathan