அசைவ வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்

குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டையை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1 கப்
முட்டை – 3
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பட்டை – 3
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
நெய் – 4 ஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி சாறு – கால் கப்
புதினா – அரை கட்டு
கொத்தமல்லி தலை – அரை கட்டு
உ‌ப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு அரிசியில் உள்ள நீர் சுண்டும் வரை அரிசி உடையாமல் வதக்கவும்.

* இதனுடன் தேங்காய் பால் 1 கப், கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு லேசாக நுரை வரும்படி அடித்து வைக்கவும்.

* ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

* அடுத்து அதில் முட்டை ஊற்றி இடைவிடாது கிளறிவிட்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

* இந்த முட்டைக் கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

* சூப்பரான முட்டை புலாவ் ரெடி. 201705301515494781 how to make fried egg pulao SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button