26.2 C
Chennai
Friday, Dec 13, 2024
1 chilli manchurian 1670247082
அசைவ வகைகள்

சில்லி மீல் மேக்கர்

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (கீறியது)

* வினிகர் – 2 டீஸ்பூன்

* க்ரீன் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்

* ரெட் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு…

* மீல் மேக்கர் – 3 கப் (வேக வைத்தது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்1 chilli manchurian 1670247082

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல் மேக்கரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Chilli Meal Maker Recipe In Tamil
* பின் வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் சர்க்கரை, உப்பு மற்றும் அனைத்து வகையான சாஸ்களையும் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் பொரித்த மீல் மேக்கரை சேர்த்து, சாஸ் உடன் நன்கு கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான சில்லி மீல் மேக்கர் தயார்.

Related posts

சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா

nathan

கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)

nathan

சிக்கன் பாப்கார்ன்

nathan

சில்லி முட்டை

nathan

பேபி கார்ன் 65

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan