26.7 C
Chennai
Monday, Jan 13, 2025
1 chickenperatal 1655555082
அசைவ வகைகள்

சிக்கன் பிரட்டல்

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

* சின்ன வெங்காயம் – 10-15

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

ஊற வைப்பதற்கு…

* சிக்கன் – 500 கிராம்

* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* தயிர் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

மசாலா பொருட்கள்..

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்1 chickenperatal 1655555082

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் வெங்காயம், வறுத்த மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

Chicken Peratal Recipe In Tamil
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

* சிக்கனில் இருந்து நீர் வெளிவர ஆரம்பிக்கும் போது, எண்ணெய் ஊற்றி கிளறி, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* சிக்கன் நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதில் தேங்காய், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், சிக்கன் பிரட்டல் தயார்.

Related posts

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை

nathan

மட்டன் சுக்கா

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

சூப்பரான இறால் சுக்கா மசாலா

nathan

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

நண்டு ஃப்ரை

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

முட்டை சீஸ் ஆம்லெட்

nathan