27.8 C
Chennai
Saturday, May 17, 2025
ll 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..

* முள்ளங்கியை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து வேக வைத்தால் நல்ல வாசனையுடனும், சுவையாகவும் இருக்கும்.

* ஃபில்டரில் காப்பி பொடியைப் போடும் முன்பு 1துளி உப்பு போட்டு பிறகு காப்பி பொடியைப் போட்டால் காப்பி டிகாஷன் ஸ்ட்ராங்காகவும் சுவையாகவும் இருக்கும்.
* இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும், வாசனையும் அருமையாக இருக்கும்.
* தேன்குழல் செய்ய மாவு அரைக்கும் போது வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து அரைத்தால் தேன்குழல் மிகவும் சுவையாக இருக்கும். * பாசிப்பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொண்டு தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து வடை தட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
ll 1
* டீயில் இரண்டு துளிகள் பன்னீரை விட்டு சாப்பிட்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* துவையல் அரைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சம் இலைகளைச் சேர்த்து அரைத்தால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
* ரவா, மைதா போன்ற தோசைகளுக்கு கரைக்கும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டால், தோசை மெத்தென்று சுவையாக இருக்கும்.
* தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து அதில் சோள மாவு, வெறும் வாணலியில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து தோசை மாவில் சேர்த்துவிட்டால் மாவு கெட்டியாகும், சுவையும் மாறாமல் இருக்கும்.
* காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டால் இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து கட்லெட் செய்யலாம்.
* அவசரமாக சாம்பார் செய்ய, பாசிப்பருப்பை அரை பதத்தில் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய், தக்காளி துண்டுகள் சேர்த்து தாளித்தால் அற்புதமான சாம்பார் தயார்.
* ஜவ்வரிசியை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து ஆறியதும் அதில் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து ஊறவிட்டால் வித்தியாசமான பச்சடி தயார்.

Related posts

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..

nathan

உங்களுடைய குழந்தைகள் பரீட்சை நல்லா எழுதணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்.. பயன்தரும் சமையல் அறை குறிப்புகள் பற்றி பார்ப்போம்….!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த 8ல் ஒன்றை தேர்வு செய்யுங்க: உங்கள் குணம் இப்படித்தானாம்

nathan

ஈஸியா தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

nathan

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்கள் கவனத்திற்கு.. இந்த தப்பை செய்துவிடாதீர்கள்..

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!!

nathan