ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் உயிரை எடுக்கும் வயிற்று வலியை குறைக்க.!

கற்றாழை ஜூஸ் :

கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட ஓர் பானம். மாதவிடாய் நேரத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸைக் குடித்து வந்தால் வயிற்று வலி விலகும். அதுமட்டும்மன்றி உடலும் சுத்தமாகும்.

எலுமிச்சை ஜூஸ் :

மிதமான சூட்டிலுள்ள நீருடன் எலுமிச்சைச் சாறு, சிறிது அளவு உப்பு கலந்து பருகினால் மாதவிடாய் வயிற்று வலியை குறைக்க உதவும்.

இஞ்சி ஜூஸ் :

இஞ்சி ஜூஸ்யுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் வயிற்று வலி பிரச்சனை அகலும்.

வெந்தய நீர் :

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால், மாதவிடாய் மூலம் ஏற்படும் வலிகள் அகலும்.

சூடான ஒத்தடம் :

மிதமான சூட்டிலுள்ள நீரை ஒரு துணியில் நனைத்து வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வயிற்று வலி குறையும்.

சீரகம் :

சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது சீரகத்தைப் பொடி செய்து மிதமான சூட்டிலுள்ள நீரியில் போட்டு குடிக்க வேண்டும். இப்படி குடித்தால் வயிற்று வலி குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button