30.8 C
Chennai
Monday, May 20, 2024
ghgh
ஆரோக்கிய உணவு

சத்து மற்றும் சுவையான பேரீச்சம் பழம் பாயாசம் செய்முறை

குழந்தைகளுக்கு பேரீச்சம் பழம் மிகவும் உகந்தது. பேரீச்சம் பழத்தை வைத்து சத்தான சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பேரீச்சம்பழ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

விதை நீக்கிய பேரீச்சம் பழம் – 20,
பால் – 2½ கப்,
முந்திரி மற்றும் பாதாம் – 10,
நெய் – 1 தேக்கரண்டி.
ghgh
செய்முறை: பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும். அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும். அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.

இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும். தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம். இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.

Related posts

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்

nathan

ஓமம் மோர்

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

சூப்பரான … வெஜ் பர்கர்

nathan

சத்துமாவு. ஆம்….பல தானியங்கள். பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும்…

nathan

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

வாரத்திற்கு இருமுறை கட்டாயம் ப்ரோக்கோலி சாப்பிடுங்க

nathan

வாயு தொல்லை இருந்து விடுபட பூண்டு களி

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan