ஆரோக்கிய உணவு

சூப்பரான … வெஜ் பர்கர்

பொதுவாக பர்கரை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். அப்படி கடைகளில் வாங்கி சாப்பிடும் பர்கரை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதில் சுவைக்காக சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் நாளடைவில் தொப்பை வர ஆரம்பித்து, பின் பெரும் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஆகவே பர்கர் உங்களுக்கு மிகவும் பிடிக்குமானால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

ஏனெனில் வீட்டில் செய்து சாப்பிடும் எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது தான். ஆகவே பர்கரை வீட்டில் செய்து சுவையுங்கள். உங்களுக்கு வெஜ் பர்கரை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு எளிமையான வெஜ் பர்கரின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Homemade Veg Burger
தேவையான பொருட்கள்:

பன் – 2
நறுக்கிய முட்டைக்கோஸ் – 3 டீஸ்பூன்
தக்காளி – 2 (வட்டமாக நறுக்கியது)
வெங்காயம் – 3 (வட்டமாக நறுக்கியது)
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் – 2 துண்டுகள்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உள்ளே வைப்பதற்கு…

காய்கறிகள் – 1 1/2 கப் (2 கேரட், 5-6 பீன்ஸ் மற்றும் 2 உருளைக்கிழங்கு)
சோம்பு பொடி – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் காய்கறிகளை நன்கு மென்மையாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சோம்பு பொடி சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் சேரம் மற்றும் பீன்ஸ் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் உருளைக்கிழங்கை நன்கு மசித்து சேர்த்து கிளறி இறக்கி, இரு பாதியாக பிரித்து, கட்லெட் போன்று வட்டமாக தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பன்னை எடுத்து, பக்கவாட்டில் இரண்டாக வெட்டி, அடிப்பாகத்தின் மேல் கட்லெட்டை வைத்து அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மேலே சிறிது முட்டைக்கோஸைத் தூவி, பின் வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை வைத்து, அதன் மேல் தக்காளி சாஸ் சேர்த்து பன்னின் மறுபாதியை வைத்து பரிமாற வேண்டும். அதேப் போன்று மற்றொரு பன்னையும் செய்தால், சிம்பிளான வெஜ் பர்கர் ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button