சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மைதா ஸ்வீட் சிப்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்
தேவையான பொருட்கள் :

மைதா மாவு – ஒரு கப்,
பொடித்த சர்க்கரை – அரை கப்,
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை :

* மைதா மாவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ஃபுட்கலர் சேர்த்து, நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

* தேய்த்த மாவில் சிறிய மூடிகளால் ‘கட்’ செய்து, (வேண்டிய வடிவில்) கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெட்டி வைத்ததை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மைதா ஸ்வீட் சிப்ஸ் ரெடி.

* குறிப்பு : மாவை சப்பாத்தி போல் செய்து கத்தியால் கட்டங்களாக வெட்டியும் செய்யலாம். 201612021531378663 Evening Snacks Maida Sweet Chips SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button