ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுஆரோக்கியம் குறிப்புகள்

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

கொஞ்சம் கஷ்டமோ..!

நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இந்த சர்க்கரை முதல் இடத்தில் உள்ளது.

சர்க்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் கடினம் என்றாலும், முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

எடையை குறைக்க

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி பிறகு உங்களின் உடலில் இந்த மாற்றம் நடக்க கூடும். அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறையும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும், தொப்பையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் இந்த நல்ல தீர்வை தரும்.

அதிக இளமை வேண்டுமா..?

இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும். இவை தோலில் உள்ள செல்களை சிதைக்காமல் வைத்து கொள்ளும்.

மேலும், சீக்கிரமே வயதாகாமல் மிக இளமையாக இருப்பீர்கள். அத்துடன் முக சுருக்கங்களும் வராது.

இதய நோய்களுக்கு

பொதுவாக சர்க்கரை சாப்பிடும் பழக்கம் கொண்ட பலருக்கு இதய நோய்கள் சாதாரணமாகவே வர கூடும். அந்த வகையில் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இதயத்திற்கு வர கூடிய பாதிப்புகள் மிக குறைவு. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும்.

bed room romance 1

தாம்பத்திய வாழ்க்கை எப்படி..?

சர்க்கரை சாப்பிட கூடிய பல ஆண்களுக்கு கலவியில் ஆர்வம் சீக்கிரமாகவே குறைந்து விடும். மேலும், இது ஆண்களின் உடலில் சில சீரற்ற மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

பெண்களின் செக்ஸ் ஹார்மோன், சர்க்கரை எடுத்து கொள்வதால் குறையவும் கூடும். எனவே, இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

மூளையின் செயல்திறனுக்கு

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மூளையின் செயல்திறன் அதி வேகமாகவே இருக்க கூடும். மேலும், நல்ல மனநிலையும் உங்களுக்கு ஏற்படும்.

வேலை பளுவால் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் பலருக்கு இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நிம்மதியான சுவாசத்திற்கு

நமது உயிர் இயங்க முக்கிய காரணமாக இருக்க கூடிய இந்த சுவாசம் சுத்தமாக இருத்தலே நல்லது. சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த பயனும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, பற்களில் துர்நாற்றம் வீசாமல் இனிமையான சுவாசம் உங்களுக்கு கிடைக்கும்.

பருக்களுக்கு டாட்..!

சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த பயன் உங்களுக்கு சுலபமாகவே கிடைக்கும். உண்மைதாங்க, முகத்தில் ஏற்பட கூடிய பருக்களை இந்த சர்க்கரை இல்லாத பழக்கம் குறைத்து விடும். மேலும், சரும வறட்சியையும் இது தடுக்கும்.

இதன் தாக்கம் குறைவோ..!

சர்க்கரையை பற்றி பேசும் போது எப்படி சர்க்கரை நோயை பற்றி பேசாமல் இருக்க முடியும். ஆமாங்க, சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் சர்க்கரை நோயினால் வர கூடிய அபாயம் உங்களுக்கு மிக குறைவு. மேலும், இது இன்சுலினையும் நன்கு சுரக்க வைக்கும்.

நிம்மதியான தூக்கத்திற்கு

இன்று பலர் அவதிப்படும் விஷயத்தை எளிதாக கையாளுகிறது இந்த சர்க்கரை பழக்கம். சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதால் எளிதில் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும்.

இரவில் நல்ல தூக்கம் வருவதால் ஹார்மோன்களும் சம அளவில் சுரந்து உடல்நல குறைபாட்டை தவிர்த்து விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button