27.7 C
Chennai
Monday, Mar 17, 2025
2 1626
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த 6 ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்… தெரிந்துகொள்வோமா?

நம்முடைய கம்பர்ட் எல்லையிலிருந்து வெளியேறுவது என்பது பெரும்பாலானவர்களுக்கு மிகவும் கடினமான மற்றும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கலாம். தைரியம் என்பது அனைவருக்கும் எளிதில் வந்துவிடாக் கூடிய ஒன்றல்ல. தைரியம் என்பது திரைப்படங்களில் காட்டப்படும் ஹீரோயிசம் அல்ல, நிஜ வாழ்க்கையில் தைரியம் என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.

தைரியமான முடிவுகளை எடுப்பது, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வது, யாரிடமும் வளைந்து கொடுக்காமல் செல்வது என அனைத்துமே தைரியத்தைத்தான் குறிக்கிறது. இந்த தைரியம் சிலருக்கு இயற்கையாகவே இருக்கும், சிலருக்கோ என்ன செய்தாலும் வராது. அந்த வகையில் ஒருவரின் ராசி இந்த தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை கூறக்கூடும். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே பயமில்லாதவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அனைவரையும் விட துணிச்சலானவர்கள். இவர்கள் மற்றவர்களை வழிநடத்த பிறந்தவர்கள் ஒருபோதும் மற்றவர்களை பின்பற்றி நடக்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர்கள், மேலும் அவர்கள் செய்யும் எந்தவொரு காரியத்திலும் முதன்மையானவராக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். சவால்கள் மற்றும் ஆபத்தைக் கண்டு ஒருபோதும் அவர்கள் அஞ்சமாட்டார்கள்.

சிம்மம்

தைரியம் மற்றும் நேர்மறை சிந்தனைகளே இவர்களை வழிநடத்தும் குணங்களாகும். எதிர்மறை எண்ணத்தை பரப்பும் பலர் நம்மை சுற்றி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் இவர்களிடம்பலனளிக்காது. அனைத்திலும் உறுதியும், வலிமையும் கொண்டவர்கள் இவர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்து எந்த அச்சமும் அவர்களை பின்வாங்க வைக்க முடியாது.

 

விருச்சிகம்

தன்னம்பிக்கையும், ஆழமான துணிச்சலும் இவர்களின் சிறந்த குணங்களாகும். எது சரி, எது தவறென்று பிரித்து பார்க்கும் வழக்கம் இவர்களிடம் எப்போதும் இருக்கும். அதனால் தனக்கு சரியென்று படுவதிலிருந்து பின்வாங்கவே மாட்டார்கள். வெற்றியை ருசிக்க ஆபத்தைக் கடக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். எனவே எந்நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே சாகசத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எந்த இடத்திற்கும், எந்த நேரத்திலும் துணிச்சலாக செல்லும் குணம் இவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ள இவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக வைத்திருக்க வேண்டுமென்று இவர்கள் விரும்புவார்கள்.

கும்பம்

இவர்களின் அச்சமற்ற அணுகுமுறையை இவர்கள் தங்கள் பலமாகக் கருதுகிறார்கள். தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இவர்கள் ஒருபோதும் அஞ்சுவது இல்லை. ஆபத்துகள் நிறைந்திருந்தாலும் தனக்கு பிடித்ததை செய்ய இவர்கள் ஒருபோதும் தயங்குவது இல்லை. தங்களுக்கான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பயம் என்றால் என்னவென்று தெரியும், அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றும் தெரியும். தங்களின் பயத்தை ஒப்புக்கொள்ள இவர்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை, மாறாக அதனை எப்படி வெற்றிகொள்ளலாம் என்றே இவர்கள் சிந்திப்பார்கள். பிரச்சினைகளை தீர்க்க இவர்கள் ஒருபோதும் வன்முறையை நாடுவதில்லை. மோதல்களையும், வெறுப்பு வாதங்களையும் இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

Related posts

பவழம் யார் அணியலாம் (coral)

nathan

பனங்கிழங்கு சாப்பிட்டால் கட்டாயம் இத செய்ய வேண்டும்!…

sangika

தெரிஞ்சிக்கங்க…பச்சிளம் குழந்தை அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் என்ன செய்யலாம்

nathan

இத படிங்க..மீண்டும் மீண்டும் ஒரே பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்த வேண்டாம்!!

nathan

மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா பிளாஸ்டிக் பாட்டில்? அதிர்ச்சி தகவல்!!!

nathan

நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

nathan

உங்க ராசிப்படி உங்களின் ஆபத்தான குணம் என்ன தெரியுமா?

nathan

உச்சக்கட்ட பேரதிர்ஷ்டம்! 2023 வரை பணமழையில் 3 ராசிகள்

nathan

எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை வாங்காதீங்க… தெரிந்துகொள்வோமா?

nathan