ஆரோக்கியம் குறிப்புகள்

அடேங்கப்பா! டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது.

இது மற்றவர்களிடம் இருந்து தனித்துவமானவர்களாக இவர்களைக் காட்டும். இவர்களை தனிப்பட்ட குணங்களில் நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் இரண்டுமே அடங்கும்.

பொதுவாக டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் எப்பொழுதும் ஒரு சிரிப்பு இருக்கும், அதுதான் இவர்களின் அடையாளமாகவே இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இந்த சிரிப்பை மட்டும் அவர்கள் இழக்க மாட்டார்கள். இந்த பதிவில் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் நிறைகள் மற்றும் குறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

எதார்த்தமானவர்கள்

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கனவு காண்பவர்கள் அல்ல, எப்பொழுதும் எதார்த்ததுடன் எளிதில் ஒட்டிக்கொள்பவர்கள். மிகச்சிறிய வயதிலேயே வாழ்க்கையின் எதார்த்தத்தை இவர்கள் புரிந்து கொள்வார்கள். இவர்களின் பணிவும், எதார்த்தமான அணுகுமுறையும் அனைவராலும் பாராட்டக்கூடியதாக இருக்கும்.
luytd
ஈகோ கொண்டவர்கள்

பொதுவாக இவர்கள் ஈகோ கொண்டவர்களாக அனைவராலும் உருவாக்கப்படுத்தப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இவர்களின் உண்மையான குணம் தெரியும். இவர்களின் ஈகோ என்பது இவர்களுடைய சுயமரியாதையுடன் தொடர்புடையது. எனவே அவர்கள் அதனை ஒருபோதும் இவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். னவே அவர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை வழங்கினால், அது அவர்களின் சுயமரியாதையின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களின் பெரும்பாலான முடிவுகள் இந்த இயல்பைப் பிரதிபலிக்கும்.

தேசபக்தியாளர்கள்

இவர்களுக்கு தாய் நாடு என்பது மிகவும் முக்கியமானதாகும். அரசியலை இவர்கள் கூர்ந்து கவனிப்பவர்களாக இருப்பார்கள், அதற்கு காரணம் இவர்களுக்கு நாட்டின் மீதுள்ள அக்கறையாகும். இவர்கள் தங்கள் தேசத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களில் ஒருவரல்ல, ஆனால் அது கொண்டிருக்கும் எல்லா நன்மைகளுக்காகவும் அதை நேசிப்பவர்களில் ஒருவர்.

சொந்த கருத்துடையவர்கள்

அனைத்து விஷயங்களிலும் இவர்களுக்கென தனிப்பட்ட கருத்து இருக்கும். தனது கருத்துக்களை வெளிப்படுத்த இவர்கள் ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள், குறிப்பாக அரசியல் விஷயங்களில் இவர்களின் கருத்துக்கள் எப்பொழுதும் சரியானதாக இருக்கும். அவர்கள் மக்களிடையே உட்கார்ந்து வெவ்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறார்கள், அதற்கு தங்களின் பரந்த அறிவை பயன்படுத்துவார்கள். இதனாலேயே இவர்கள் ஆசிரியர்களாக இருக்க வாய்ப்புள்ளது.

காதலில் அர்ப்பணிப்பு

இவர்கள் காதலில் இருக்கும்போது தனது இதயம் முழுவதும் அன்பால் நிறைத்து வைத்திருப்பார்கள். தங்கள் துணைக்கு எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் இதுதான் இவர்களை காதல் வாழ்க்கையில் சிக்கலையே ஏற்படுத்தும். ஏனெனில் இவர்கள் அதே அர்ப்பணிப்பை தங்கள் துணையிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில் இவர்களின் காதல் வாழ்க்கை கேள்விக்குறியாக்கிவிடும்.

உணர்ச்சிக்கு அடிமையானவர்கள் அல்ல

வாழ்க்கையில் இவர்களின் எதார்த்தமான அணுகுமுறையின் காரணமாக இவர்கள் எப்பொழுதும் தர்க்கரீதியாக சிந்திப்பார்களே தவிர உணர்ச்சிக்கு அடிமையாக மாட்டார்கள். எந்தவொரு முடிவையும் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுப்பவர்கள் அல்ல.

இதயத்தின் வயது

இவர்களின் வயது இவர்களுடைய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஒருபோதும் குறைக்காது. இவர்கள் எந்த வயதில் இருந்தாலும் இவர்களின் வசீகரம் ஒருபோதும் குறையாது. இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றலை பரப்புவார்கள். எந்த சூழ்நிலையும் இவர்களின் ஆற்றலை குறைக்க இயலாது.

பொறுமை இல்லாதவர்கள்

இவர்களை போலவே சுற்றியிருக்கும் அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தாமதமாவதையோ, அலட்சியத்தையோ இவர்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் எதிர்பார்ப்பது போல சூழல் இல்லாதபோது இவர்கள் விரக்தியும், கோபமும் அடைவார்கள்.

வெடிக்கக் கூடியவர்கள்

பொதுவாக இவர்கள் அனைவரிடமும் மென்மையாக நடந்துக் கொள்ள கூடியவர்கள்தான். ஆனால் அதுவும் ஒரு எல்லை வரை மட்டும்தான். ஏனெனில் இவர்கள் எப்பொழுது வெடிப்பார்கள் என்று கணிக்கவே இயலாது. அவ்வாறு இவர்கள் வெடிக்கும் போது அது சுற்றி இருக்கும் அனைவர்க்கும் அதிர்ச்சியையும், கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும், அதனைப் பற்றி இவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

கவனமின்மை

இவர்களின் மிகப்பெரிய பிரச்சினை இவர்களின் அதீத தைரியம்தான். ஏனெனில் இவர்க்ளின் தன்னம்பிக்கையால் இவர்கள் ஆபத்தைப் பற்றி சிந்திக்காமல் காரியத்தில் இறங்கி விடுவார்கள், அதுவே இவர்களை வேறொரு ஆபத்தில் மாட்டிவிடுவதாக இருக்கும். இதனால் இவர்கள் சிலசமயம் அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளாக நேரிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button