25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
rava piddu
சமையல் குறிப்புகள்அறுசுவை

சுவையான சத்து நிறைந்த சோள ரவை புட்டு குழந்தைகளுக்கும் நோயாழிகளுக்கும் உகந்தது!…

தேவையான பொருட்கள் :

சோளக்குருணை – 1 கப்

அரிசி மாவு – 1/4 கப்
தேங்காய்த்துருவல் – 3/4 கப்
பொடித்த வெல்லம் – 3/4 கப்
நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி – 3 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – சிறிது

rava piddu

செய்முறை :

முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

Related posts

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

nathan

ஆஹா பிரமாதம்! செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்

nathan

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

வெண்பொங்கல்

nathan

சுவையான திணை பாயாசம்

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

பட்டாணி கிரேவி

nathan

ஓட்ஸ் தோசை

nathan