29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித லிப்ஸ்டிக்கும் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள்  இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.
nature
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள்  கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய  ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்சியளிக்கும்.
கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி  செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர, கருவளையும் இருந்த இடம்  காணாமல் போயிருக்கும்.
சிலருக்கு முகத்தில் காணப்படும் மங்குவை போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்து கருப்பு திட்டுகள்  இருக்கும் இடத்தில் போட்டு வந்தால் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு மறைந்துவிடும்.

Related posts

தெரிந்து கொள்ளுங்கள்!குழந்தைகளுக்கு தினமும் இட்லி கொடுப்பது நல்லதா?

nathan

ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10! மருத்துவர் கு.சிவராமன்!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு எண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து விடீர்களா உங்களுக்கானத் தீர்வு.

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்

nathan

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

nathan

உளுந்தங்கஞ்சி

nathan

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan

பூண்டை வறுத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan