அழகு குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்!

கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவார்கள்.

அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு ஏற்ற வளையல்கள்(Bangles) அணியும் போது அது மேலும் பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.

திருமணத்தில்

பாரம்பரியம் கலாச்சாரம் ஆகிய காரணங்களால் திருமணத்தில் பெண்கள் கைகள் நிறைய வளையல்கள்(Bangles) அணிவார்கள். வளையல் அணிவதால் இது ஒரு வித மங்கல சக்தியை அதிகரிக்கிறது.

கணவனின் ஈர்ப்பை பெற

பொதுவாக ஆண்களுக்கு பெண்கள் வளையல்(Bangles) அணிவது மிகவும் பிடிக்கும். மனைவி வளையல் மூலம் எழுப்பும் சத்தம் கணவனுக்கு மனைவி மீது ஒரு ஈர்ப்பை அதிகப்படுத்தும். பொதுவாக ரொமாண்டிக் உணர்வை அதிகம் கொடுக்கும் வளையல்.

சாத்வீக-சைதன்ய அதிர்வலைகள்

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் போன்ற அதியற்புத தன்மைகள் நிறைந்திருக்கின்றன.

அவற்றை அணிந்து கொள்ளும்போது, எழும் ஓசை சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த சாத்வீக-சைதன்ய அதிர்வலைகளுக்கு உள்ளது.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

பொதுவாக கையின் மணிக்கட்டு பகுதியை மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துவர். நாடித்துடிப்பை பார்ப்பதற்கும் இந்த இடத்தியே பிடித்து பார்ப்பார்கள் .

ஆகவே வளையல்களை இந்த மணிக்கட்டு பகுதியில் அணியும் போது அவைகளின் தொடர்ந்த உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

உடலிலிருந்து வெளியேறும் மின்சாரம், இந்த வளையங்களின் வட்ட வடிவத்தால் வெளியில் போக முடியாமல் மீதும் உடலுக்குள்ளயே செல்கிறது, உடலின் ஆற்றலை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளையல் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

  • கண்ணாடி வளையல்கள் வளிமண்டலத்தில் இருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி, இயற்கையான சூழல்களில் நிலவும் சக்திகளை அதை அணிபவருக்கு கொடுக்கின்றன.
  • கண்ணாடி வளையல்கள் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களுக்கு மட்டும் அல்லாமல் உடனிருப்பவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button