ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்க முடியும்!

பாலின் வகையான தயிர், பாலைக்காட்டிலும் அதிக சத்துக்களை கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின் B6 மற்றும் B12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. பலதரப்பட்ட கடுமையான முயற்சிகள் செய்தும் உடல் பருமனை குறைக்க முடியாதவர்களுக்கான எளிய தீர்வாக தயிரை பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கடந்த 2005ம் ஆண்டு இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்கிற இதழில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர், உடல் பருமனை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிசோதனையில், உடல் பருமனாக இருந்தவர்களில் சிலர் கொழுப்பு சத்து கொண்ட தயிரை, மூன்று வேளையும் உட்கொண்டு வந்தனர். சி நாட்களிலேயே அவர்களின் எடை 22% குறைந்தாகவும்,வயிற்றுப்பகுதி கொழுப்பு மிக வேகமாக கரைந்துள்ள‌தாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இத்தகைய தயிரை கலோரி குறைந்த உணவில் சேர்த்துக்கொள்ளும் முறையை பற்றி பார்க்கலாம்.

பெர்ரியுடன் தயிர் :

பெர்ரி வகைகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதனால் தோல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதில் அதிக அளவு அத்தியாவசிய வைட்டமின்கள், ஃபைபர் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரி, மல்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளுடன் ஒரு கிண்ணம் தயிர் சேர்த்தால், ஊட்டச்சத்துள்ள பெர்ரி தயிர் தயார்.

கொட்டை வகைகளுடன் தயிர்:

காய்ந்த கொட்டை வகைகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களை பெற முடியும்.

காய்கறிகளுடன் தயிர்:

வேக வைத்த அல்லது பச்சை காய்கறிகளுடன் தயிர், உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து காய்கறி தயிரை தயார் செய்யலாம். இதன் மூலம் அதிக நார்ச்சத்துக்களை பெற முடியும்.

பழங்களுடன் தயிர்:

தர்பூசணி, மாம்பழங்கள், கிவி, ஆரஞ்ச், மாதுளை, போன்ற கோடை பழங்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதகிறது. பழங்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்கும்.

தேங்காயுடன் தயிர்:

தேங்காய் துண்டுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதனால், உடலில் ஆரோக்யமான கொழுப்புக்களை அதிகரிக்கலாம். இதனால் உடல் பருமன் குறைவதுடன், இதய கோளறுகளையும் தவிர்க்க முடியும்.

இது தவிர திராட்சைகள், தேன், கறுப்பு சாக்லேட் போன்ற கலோரி குறைந்த உணவு பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து ஆரோக்யத்தை மேம்படுத்தலாம். மேலும் உடல் பருமனை குறைக்கும் போது சந்திக்க கூடிய ஊட்டச்சத்து குறைபாட்டையும் தவிர்க்க இயலும்.dfdbfd7eb2db0c

newstm.in

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button