32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
22 621e92c63
ஆரோக்கிய உணவு

இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரியை அறவே தொட கூட வேண்டாம்!

முந்திரியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதன் நன்மைகளைப் பற்றி கூற வேண்டுமானால், இது உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும், முடிக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

முந்திரியில் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் அதிகமாக உள்ளன.

இதை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஏராளமான நன்மைகளைக் கொண்ட முந்திரி, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும்.

இப்போது யாரெல்லாம் முந்திரியை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

 

உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், முந்திரி பருப்பை சாப்பிடாதீர்கள்.
ஒருவர் முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாயு மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஆகவே வயிற்று பிரச்சனை இருப்பின், முந்திரியை அறவே தொட வேண்டாம்.
முந்திரியில் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே முந்திரியை அளவுக்கு அதிகமாக ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமனை உண்டாக்கும்.
சிலருக்கு முந்திரி சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனை வரும்.
முந்திரியில் உள்ள தைரமின் மற்றும் பீனைல்எத்திலமைன் என்னும் அமினோ அமிலங்கள், தலைவலியை உண்டாக்குவதாக கூறப்படுகிறது.
அடிக்கடி தலைவலி அல்லத ஒற்றை தலைவலி பிரச்சனை கொண்டவர்கள், முந்திரியை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்?
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸிற்கு அதிகமாக முந்திரியை சாப்பிடக்கூடாது. ஒரு அவுன்ஸ் என்பது 18 முழு முந்திரி இருக்கும்.

நீங்கள் முந்திரியின் முழு பலனையும் பெற நினைத்தால், மேலே கொடுக்கப்பட்ட பிரச்சனைகள் இல்லாவிட்டால், ஒரு அவுன்ஸ் முந்திரியை தினமும் சாப்பிட்டு, அதன் பலனைப் பெறலாம்.

Related posts

காபியும் டீயும் உடலுக்கு நல்லதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

பாகற்காய்னு சொன்னாலே வாய் கசக்குதா?… அப்ப இத படிங்க!

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

உயிருக்கே ஆபத்து! தப்பித்தவறி கூட அகத்தி கீரையை இப்படி சாப்பிடாதீங்க!…

nathan

உங்களுக்கு முட்டை பீன்ஸ் பொரியல் செய்ய தெரியுமா?

nathan

இவற்றை உட்கொள்வதன் மூலம், இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

sangika

தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?

nathan

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

nathan

கல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை

nathan