ஆரோக்கிய உணவு

தேங்காய் பால் சூப்!

மாலையில் சூப் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும். அத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் சூப். இந்த சூப் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:

சோள மாவு – 2 டீஸ்பூன்

தேங்காய் பால் – 1 கப்

பசும்பால்/சாதாரண பால் – 1 கப்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 துண்டு (தோல் நீக்கி துருவியது)

கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

எலுமிச்சை பழம் – 1/2

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் பால், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், தேங்காய் பால் மற்றும் சோள மாவு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதித்ததும், அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் ரெடி!!! இதனை பரிமாறும் போது, இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாற வேண்டும்.

Related posts

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் எள் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

nathan

சுவையான கொத்தமல்லி துவையல்

nathan

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

sangika

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்…

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?

nathan

சுவையான ரவா ஓட்ஸ் அடை

nathan