31.2 C
Chennai
Sunday, May 18, 2025
guyabano 1
ஆரோக்கிய உணவு

கான்சர் நோயையும் குணப்படுத்த கூடிய‌ சிறந்த மருத்துவ‌ பழம்!மிஸ் பண்ணீடாதீங்க?

கான்சர் நோய்க்கு சிறந்த மருத்துவ நிவாரணி!காட்டு ஆத்தாப்பழம் ( அன்னமுன்னா பழம்) மருத்துவ பயன்கள்!இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர்.இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவுகள் இல்லை
காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது.

இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.

இலைகளின் பலன்கள்:
ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.

இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.guyabano 1

Related posts

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

40 வயசு ஆயிடுச்சா? அப்படின்னா இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்!

nathan

1 to 3 month pregnancy diet chart in tamil – 1 முதல் 3 மாத கர்ப்பகால உணவு திட்டம்

nathan

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை படிப்படியாக குறைக்கும் உணவுகள்!

nathan

அலட்சியம் வேண்டாம்…. உயிரை பறிக்கும் இன்ஸ்டன்ட் உணவுகள்? சாப்பிட்டதும் விஷமாகும் அதிர்ச்சி!

nathan

Frozen food?

nathan

உங்களுக்கு தெரியுமா அல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

தொப்பையைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்:

nathan