ஆரோக்கிய உணவு

இதோ அற்புத மாற்றம்தரும் தர்பூசணி விதையை கொதிக்க வைத்து 3 நாட்கள் குடியுங்கள்

தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. அதற்கு தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

 

தர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்
ஒரு கையளவு தர்பூசணி விதையை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி 3 நாட்கள் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

அழகான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும். தர்பூசணி விதையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடிக்க வேண்டும்.

தர்பூசணி விதைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது. எனவே அதற்கு தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

தர்பூசணி விதைகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு தர்பூசணி விதைகளில் உள்ள அர்ஜினைன் என்னும் உட்பொருள் தான் முக்கிய காரணமாகும்.

தர்பூசணி விதையில் உள்ள அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள் மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துகிறது.

தர்பூசணி விதைகளில் உள்ள விட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Related posts

சளி, இருமலைப் போக்கும் உணவுகள்!

nathan

வெற்றிலையில் உள்ள ஆச்சரியமான விஷயம்

nathan

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூப்பர் டிப்ஸ்! வல்லாரைக் கீரை சட்னி

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வயதானவராக மாற்ற கூடிய அன்றாட பழக்க வழக்கங்கள்…!

nathan

நீங்கள் வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

nathan

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவும் உணவு முறைகள் என்ன….?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் ஏன் தர்பூசணியின் தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும் என

nathan

besan flour in tamil uses – கடலை மாவின் நன்மைகள்

nathan