29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
yellow 28 1506574745
ஆரோக்கியம் குறிப்புகள்

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக்க 5 ட்ரிக்ஸ்!!

நமது முக வசீகரத்தில் சிரிப்பிற்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. சிரித்த முகம் பலரையும் சிரிக்க வைக்கும். சிரிப்பில் கவனிக்க தோன்றும் ஒரு பகுதி, பற்கள். பற்களும் அழகாக வெள்ளையாக இருந்தால் பார்ப்பதற்கு மேலும் அழகாக இருக்கும். மஞ்சள் பற்கள் சிரிப்பை கட்டுப்படுத்தும். வெண்மையான பற்களை கொண்டு அழகாக சிரிக்க இங்கு பல தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்வுகளுக்காக நீங்கள் நிறைய பணம் மற்றும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொன்டே உங்கள் பற்களை வெள்ளையாக்கலாம்.
பற்களில் மஞ்சள் நிறம் படுவதற்கு காரணம் வயது முதிர்ச்சியாக இருக்கலாம். தோலில் சுருக்கங்கள் போல, பற்களில் மஞ்சள் நிறம் தோன்றும். இவைகளை நீக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளை முயற்சித்து பாருங்கள்.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்டராபெர்ரியில் உள்ள மாலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி பற்களை வெண்மையாக்கும். பற்களின் மேலே படர்ந்திருக்கிற கரையை இது போக்குகிறது. ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். இந்த பேஸ்டை கொண்டு வாரத்திற்கு 2 முறை பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். வாயில் ஸ்டராபெர்ரியை போட்டு நன்றாக மெல்லவும். இதுவும் நல்ல பலனை கொடுக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை: பேக்கிங் சோடாவில் உள்ள வேதிப்பொருள் எலுமிச்சையுடன் சேர்ந்து கலக்கும்போது பற்களுக்கு நல்ல பிரகாசத்தை கொடுக்கும். இதனை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் பற்களில் உள்ள எனாமல் மறைந்து விடும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவது நல்லது. இதனை பயன்படுத்திய பின் பற்களில் எரிச்சல் தோன்றினால், பேக்கிங் சோடா சிராய்ப்பு தன்மை கொண்டுள்ளதாக அர்த்தம். ஆகவே இந்த முயற்சியை கைவிடுவது நல்லது. ஒரு கிண்ணத்தில் சிறு துளி பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறை சேர்த்து நுரை வரும்வரை கலக்கவும். வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விட்டு, ஒரு பஞ்சை இந்த கலவையில் நனைத்து பற்களில் தேய்க்கவும். 1 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்க்கவும்.பிறகு நன்றாக கழுவவும். 1 நிமிடத்திற்கு மேல் இந்த கலவையை வாயில் வைத்திருக்க வேண்டாம். இது பற்களின் எனாமலை அரித்து விடும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் : ஆப்பிள் , கேரட், கொத்துமல்லி போன்றவை பற்களுக்கு நல்லது. இவை ஒரு இயற்கையான் டூத் பிரஷ் போல் செயலாற்றும். இவைகளை வாயில் போட்டு மெல்லுவதால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். பற்களின்மேல் உள்ள கறைகளை விரட்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களையும் வெண்மையாக்க உதவும். ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் கறைகளை போக்க கூடியது.

ஆயில் புல்லிங் : இது நமது பாரம்பரிய முறை. உடலையம் பற்களையும் சுத்தமாக்குவதற்கு உதவும். மிகவும் எளிய முறை, தீங்கு இல்லாதது. செலவில்லாதது. 1 ஸ்பூன் சுத்தமான ஆர்கானிக் எண்ணெய்யை எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். 15-20 நிமிடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். வாய் முழுதும் எண்ணெய்யை சுழற்றி, உறிஞ்சி பற்களில் படும்படி நன்றாக கொப்பளிக்க வேண்டும். பிறகு எண்ணெய்யை துப்பிவிட்டு நீரால் வாயை கழுவவேண்டும். பின்பு 2-3 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.

ஸ்ட்ரா: காபி, டீ , சோடா . ஒயின் போன்றவை பற்களை சேதமடைய செய்யும். ஆகவே இவற்றை பருகும்போது பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தலாம். ஸ்ட்ரா பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் அவற்றை பருகியபின் வாயை சுத்தமாக கழுவலாம் அல்லது ப்ரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான புன்னகை மகிழ்ச்சியை கொடுக்கும். பற்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவு பழக்கம் உங்கள் பற்களுக்கு நீண்ட ஆயுளையும் கொடுக்கும் . வெண்மையான பற்களை கொண்டு புன்னகை செய்யுங்கள். நீங்கள் அழகாக தெரிவீர்கள்! உங்கள் புன்னகையால் உலகமே அழகாகும்!

yellow 28 1506574745

Related posts

சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வில்வ இலையை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்!….

sangika

ஆபத்தான கொப்புளத்த எப்படி செலவில்லாம சரி பண்ணலாம்?

nathan

பெண்ணியம் பேசும் இந்த காலக்கட்டத்திலும்..விதவைப்பெண்களுக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட கொடுமைகள்

nathan

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan

இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்…! நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் எடை குறைவாக இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

nathan