ஆரோக்கியம் குறிப்புகள்

பெற்றோர் கட்டாயம் இதை படியுங்கள்..`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!’

ஆரோக்கியமான குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் துறுதுறுவென்றும் இருப்பார்கள்.

அந்தக் குழந்தைகளுக்குத் தூக்கம் ஒரு பிரச்னையாக இருக்காது. ஆனால், ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் அப்படி இருக்க மாட்டார்கள். இந்தக் குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோருக்குக் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவைப்படும்!
“ஆட்டிசம் குழந்தைகளுக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. இதை எவ்வாறு சரி செய்வது?” என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் விஜயசுவிதா என்பவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வாசகரின் இந்தக் கேள்வி குறித்து, மூத்த நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரத்திடம் கேட்டோம்.
மூத்த நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம்

“ஆட்டிசம் குழந்தைகளில் சுமார் 80 சதவிகிதம் பேருக்குத் தூக்கம் தொடர்பான பிரச்னை இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்க மாட்டார்கள். பாதித் தூக்கத்திலேயே எழுந்துவிடுவார்கள். லேசான சப்தம் கேட்டால்கூட விழித்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கம் இருக்காது.
dd

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே க்ளிக் செய்து பதிவு செய்யுங்க!

இதைச் சரிசெய்ய குழந்தையைப் பகல் பொழுதில் விழித்திருக்கச் செய்து, ஓடியாடி விளையாடி சுறுசுறுப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாலைப் பொழுதுகளில் குழந்தை தொலைக்காட்சி பார்ப்பதையும் இனிப்பான உணவுகள் உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிடுவது நல்லது. அதிக வெளிச்சம் இல்லாமல் சற்று இருட்டாக இருப்பதுபோல படுக்கை அறையை மாற்ற வேண்டும். பிறகு, குழந்தையைத் தட்டிக்கொடுத்தால் அதற்குத் தூக்கம் தானாக வந்துவிடும்.

அதேபோல, குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை தூங்குவதற்கான நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்குச் சற்று காலம் பிடிக்கலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தும் குழந்தைக்குத் தூக்கம் வரவில்லையென்றால் மருத்துவரை அணுகினால், அவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பார். இது கடைசி நிலைதான்.

இயல்பாக உள்ள குழந்தைக்கு பெற்றோர் உறங்கச் செல்கிறார்கள் என்றால் தெரியும். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைக்கு அது தெரியாது என்பதால் தூங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கி, பயிற்றுவிக்க வேண்டும்” என்கிறார் மீனாட்சி சுந்தரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button