28.5 C
Chennai
Sunday, May 18, 2025
T 15080
ஆரோக்கிய உணவு

கொழுப்பு, உடல் எடை குறைக்கும்… கொள்ளு தரும் 8 அபார மருத்துவப் பலன்கள்!

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

காணப்பயிர்

ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு இதை உணவாகக் கொடுத்தனர். குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால்தான், குதிரை கொழுப்புக் கூடாமல் சிக்கென்ற உடல்வாகோடு இருக்கிறது; அதிவேகமாக ஓடுகிறது; இதன் காரணமாகத்தான் இதை, `குதிரைக் கொள்ளு’ என்றும் சொல்கிறார்கள்.
T 15080
கொள்ளு

அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதில் நிறைந்திருக்கும் மருத்துவப் பலன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் ரமேஷ்… டாக்டர் ரமேஷ்

ஆரோக்கியப் பலன்கள்

புரதம் நிறைந்தது
அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
U 15474
உடல் எடை குறைக்கும்!
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

சளி, காய்ச்சல்
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்; காய்ச்சலையும் குணமாக்கும்.
V 15464
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்; உடல் வலுவாகும்.

கொள்ளு சமையல்

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்!
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக, `கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate) வகை சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும்’ என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. மேலும், கொள்ளுவையும் இந்துப்பையும் சிறிது எடுத்துக்கொண்டு, அவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் கற்களைக் கரைக்கும்.

கொள்ளு
Gram pc 15066
விந்தணுக்கள் அதிகரிக்கும்!
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க உதவுபவை.

சர்க்கரைநோய் தடுக்கும்!
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் `கிளைசெமிக் இண்டெக்ஸ்’ எனப்படும். இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.
S 15356
மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும். பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம்; சூப்பாகவும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்த்தல் நல்லது.

Related posts

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் : மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்…!

nathan

சுவையான… பீட்ரூட் பொரியல்

nathan

ஞாபக சக்தி பெருக உதவும் கோரைக்கிழங்கு! எப்படி பயன்படுத்தலாம்?

nathan

ரிச் ஓட்டல் சுவையில் வெங்காய பஜ்ஜி செய்யனுமா?

nathan

ருசியான பட்டர் சிக்கன் செய்முறை!

nathan

சுவையான சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா தேனில் ஊறிய பூண்டு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா!!

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்… பிரமாதப் பலன்கள்!

nathan

வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan